பேல்பூரி 

பிள்ளையைப் போட்டு பலாப்பழம் எடுத்த ஓடை
பேல்பூரி 

கண்டது

(நெல்லை கொக்கிரகுளத்தில் இருக்கும் ஓர் ஓடையின் பெயர்)

பிள்ளையைப் போட்டு பலாப்பழம் எடுத்த ஓடை

ஜானகி பரந்தாமன்,
கோயம்புத்தூர் -36.
 

(மீன்சுருட்டியில் ஒரு சரக்கு உந்து வாகனத்தில்)

போதிக்கும்போது புரியாது...
பாதிக்கும்போது புரியும்.

பா.தங்கரதி பாஷ்யம்,
சலுப்பை.

(மயிலாடுதுறை பூக்கடைத் தெருவில் ஓர்ஆட்டோவின் பின்புறத்தில்)

ஓடவும் முடியாது...
ஒளியவும் முடியாது...
அதுதான் கரோனா.

சங்கீத சரவணன்,
மயிலாடுதுறை.

(விழுப்புரத்தில் உள்ள ஒருதிருமண மண்டபத்தின் பெயர்)

கரும்பு திருமண மண்டபம்

கே.இந்துகுமரப்பன்,
விழுப்புரம்.

கேட்டது


(சிதம்பரம் மேல வீதியில் உள்ள ஒரு டீக்கடையில்)

""அண்ணே ஒரு டீ பார்சல் கொடுங்க''
""பாத்திரம் எடுத்துகிட்டு வா...
பார்சல் வேணும்னா''
""அண்ணே வட்டா செட்டில் டீ போட்டு அப்படியே கொடுத்தால் அது இங்க குடிக்கிற டீ... டம்ளரைக் கவிழ்த்து கொடுங்கள் அது பார்சல் டீ''
""நீங்கள் எல்லாம் எந்த கிரகத்திலிருந்துடா வந்து இருக்கீங்க?''

பொ.பாலாஜிகணேஷ்,
கோவிலாம்பூண்டி.

(சிதம்பரம் ஆசிரியர் நகர் அருகில்)

போலீஸ்: லாக்டவுன் நேரத்துல கூட 2 பேரும் சேர்ந்துதான் காய்கறி வாங்கப் போகணுமா?
கணவர்: சார் அவளுக்கு வண்டி ஓட்டத்தெரியாது சார்...
போலீஸ்: நீயே போய் வாங்கிண்டு வரவேண்டியதுதானே?
மனைவி: ஹ்ம்ம்ம்.... இவருக்கு கீரைக்கும் கொத்தமல்லிக்குமே வித்தியாசம் தெரியாது சார்.

ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்-1.

யோசிக்கிறாங்கப்பா!


ஏதேனும் தேவைப்பட்டால்முகவரி தேடுகிறார்கள்...
எதுவும் தேவையில்லை என்றால்முகங்களையே மறந்து விடுகிறார்கள்!

எல்.மோகனசுந்தரி,
கிருஷ்ணகிரி-1.

மைக்ரோ கதை


வீட்டிற்கு திரும்பிய டிடெக்டிவ் ராஜசேகர் வாசற்படியில் சொட்டு சொட்டாய் உறைந்திருந்த ரத்தத்தைப் பார்த்து "ஜர்க்' ஆனான். என்ன நடந்திருக்கும்? இது யாருடைய வேலையாக இருக்கும்? யாருக்கு என்னவாயிருக்கும்? என்று டிடெக்டிவ் மூளை, பரபரவென சந்தேக மின்னல்களை
வெட்டியது.
"அந்த வாசற்படிக்கு மேலே உள்ள சிசிடிவி ஃபுட்டேஜ்களைப் பார்த்தால் யாரென்று தெரிந்துவிடப்போகிறது' என்ற துள்ளலுடன் வாசற்படிக்கு மேலே இருந்த சிசிடிவி கேமராவைப் பார்ததான். ஆனால் அதன் வயரும் துண்டிக்கப்பட்டு தொங்கியது. இது யார் வேலை? யாருடையது இந்த ரத்தத்
துளிகள்? சிந்தனையுடன் மேலே
பார்த்தவன் பார்வையில் எதிர்வீட்டு சிசிடிவி கேமரா கண்ணில்பட்டது.
"கண்டுபிடித்துவிடலாம்'.
உடனே ஓடிச் சென்று கேமரா ஃபுட்டேஜ்களை ஆராய்ந்தபோது, ஓர் எலி இவன் வீட்டு கேமரா வயரை பற்களால் கடித்து "கட்' செய்வதும் அதே விநாடி ஒரு பூனை அந்த எலியைப் பாய்ந்து கவ்விப்பிடித்து ரத்தம் சொட்டச் சொட்ட இவன் வீட்டு வாசற்படியிலேயே வைத்துத்
தின்பதும் தெளிவாகப் பதிவாகியிருந்தது. "ஒரு
டிடெக்டிவ்க்கே கிலியை ஏற்படுத்திய எலியின் ரத்தமா இது?' நிம்மதிப் பெருமூச்சு விட்டான் ராஜசேகர்.

க. விஜயபாஸ்கர்,
திருச்சி -6.


என்ன நடக்குமோன்னு நினைச்சா பயம்...
என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்னு நினைச்சா தைரியம்...
இவ்ளோதான் வாழ்க்கை!

மா.பழனி,
தருமபுரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com