கரோனா... மனசை லேசா வைச்சுக் கோங்க!

கரோனா..இந்த ஒற்றை சொல்லைக் கேள்விப்படாத உலக நாடுகளே இல்லை எனலாம். சிறு வயது குழந்தை முதல் 100 வயது முதியவர் வரை அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தையாக இது மாறிவிட்டது.
கரோனா... மனசை லேசா வைச்சுக் கோங்க!


கரோனா..இந்த ஒற்றை சொல்லைக் கேள்விப்படாத உலக நாடுகளே இல்லை எனலாம். சிறு வயது குழந்தை முதல் 100 வயது முதியவர் வரை அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தையாக இது மாறிவிட்டது.

இப்படி, கரோனா குறித்த மனப் பதற்றத்துடன் இருப்பவர்களை, ஆசுவாசப்படுத்த ஆலோசனைகள் வழங்க வேண்டும் என கடையநல்லூரைச் சேர்ந்த மன நல ஆலோசகர் டாக்டர் எம் நவாஸ்கானைசந்தித்துப் பேசினோம். அப்போது அவர் கூறியது:

""கரோனா உடல் அளவில் தாக்கத்தை எந்த அளவுக்கு ஏற்படுத்துகிறதோ அதை விட அதிக தாக்கம் மனதளவிலும் உண்டாக்குகிறது என்பதுதான் உண்மை. நம் உடலில் நாம் காணும் நோய்கள் எல்லாவற்றுக்கும் (கரோனா உட்பட) ஒருவகையில் அச்சம்தான் மூலகாரணம் என்றால் நம்புவீர்களா? ஆனால், நீங்கள்கண்டிப்பாக நம்பித்தான் ஆக வேண்டும். மனரீதியாவும், மருத்துவரீதியாகவும் அது உண்மைதான்.

கரோனா வந்தாலே குலை நடுங்கி ஒடுங்கத் தேவையில்லை. தேவையற்ற பீதி பல நேரங்களில் நம்மை தீவிர மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி தேவையற்ற விபரீத முடிவுகளை எடுக்க வைக்கிறது.

கரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துவிட்டாலே நிலைகுலைந்து போய் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டால் மரணம் ஏற்படும் என்ற தவறான தகவல் பரப்பப்படுவதால் இத்தகைய விபரீத முடிவை சிலர் எடுக்கின்றனர். இதற்கு தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புவர்களே காரணமாக இருக்கின்றனர். எனவே, இது போன்ற அச்சமான, பதற்றமான மன நிலையில் இருப்பவர்கள் கரோனா தொடர்பான அச்சம் தரும் செய்திகளைப் பார்ப்பதைத் தவிர்த்துவிடுங்கள். கரோனா மரணங்களைப் பார்க்கும்போது சிலருக்கு பயம் வந்துவிடும்.

பயம் வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும்.

நம் உடல் போன்று சிறப்பாக, சீராக இயங்கும் இயந்திரம் இதுவரைக்கும் உலகத்தில்கண்டறியப்படவேயில்லை. நம் உடல்ஆச்சரியத்தின் உச்சம். நம் உடல், நம் அனுமதியைக் கேட்டு செயல்படுவதில்லை.இயல்பாக இயங்கி வருகிறது.இப்படிஅற்புதமாக படைக் கப்பட்ட உடலின் ஒரு குறிப்பிட்ட பாகம் பாதிக்கப்பட்டால் கூட , தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் திறனையும் நம் உடல் பெற்றுள்ளது. இதை உணர்ந்தால் தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்கலாம். நாம் அதைச் சரியாக பராமரிக்கிறவரைக்கும் எந்தப் பிரச்னையும் வர வாய்ப்பில்லை.

பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிற மனித இனம் கரோனா போன்று எத்தனையோ பேரிடர்களைக் கடந்துதான் வந்திருக்கிறது. அம்மை, பிளேக் போன்று எத்தனையோ பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. அன்றைய காலகட்டத்திலேயே இது சாத்தியம் என்றால், இன்றைய மருத்துவ உலகத்தில் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்பதைமுதலில் நாம் நம்ப வேண்டும். ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் கூட அதற்கான முன்னேறிய மருத்துவ முறை நம்மிடம் உள்ளது. நாம் கவலைப்பட வேண்டாம் என்ற நம்பிக்கையை நமக்கு நாமே ஊட்டிக் கொள்ளவேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களைப் பார்ப்பவர்களும், பேசுபவர்களும் அவர்களுக்கு நம்பிக்கை தரும் வார்த்தைகளை மட்டுமே கூற வேண்டும். அந்தத் தொற்றிலிருந்து மீண்டு வந்த நண்பர்கள் தற்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பதை அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவர்கள் பட்ட கஷ்டங்களை மட்டும் சொல்லக் கூடாது.

கரோனா சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கு முதலில் மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அவர்களின் பொழுது போக்கிற்காக மொபைல், புத்தகம், தொலைக்காட்சி வசதி செய்து தரலாம். அவர்களிடம் போனில் அடிக்கடி பேசுங்கள். அவர்களை ஆசுவாசப்படுத்துங்கள். பேசும்போது பொதுவான தகவல்களை மட்டுமே பேசுங்கள். கரோனா குறித்த பாதிக்கப்பட்டவர்கள் பற்றி, அதனால் இறந்தவர்கள்குறித்துப் பேச வேண்டாம்.

குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மருத்துவர்கள் கரோனா தொற்று ஏற்பட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு மருந்துகளால் சிகிச்சை அளிப்பதையும் தாண்டி தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் வார்த்தைகளினால் சிகிச்சை அளிக்க வேண்டும். இதனால் அவர்களை மன உளைச்சலில் இருந்து மீட்க முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக, மனசை லேசா வச்சுக்கோங்க'' என்றார் நவாஸ்கான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com