பேல்பூரி

பேல்பூரி

எல்லாருக்கும் நல்லவனாக இருக்க வேண்டும் என்றால்,முதலில்அறிவுரைகள்... ஆலோசனைகள் கூறுவதை நிறுத்த வேண்டும்.


கண்டது

(விருத்தாச்சலம் மணவாள நல்லூர் கொளஞ்சியப்பர் கோயில் சுவரில்)

எளிதான வாழ்க்கைக்காகப் பிரார்த்தனை செய்யாதீர்கள்.
கடினமான வாழ்க்கையை எதிர்கொள்ள பலத்தைக் கேளுங்கள்.

ஆர்.ருக்மணி,
சிதம்பரம்.

(மதுரையில் ஒரு டூ வீலரின் பின்புறம்)

நன்றி கெட்ட உலகம்டா இது

ஜே.கமலம்,
ருநெல்வேலி-7

(சென்னை, பெசண்ட் நகரில் அமைந்துள்ள ஒரு உணவகத்தின் பெயர்)

க உணவகம்.

ஆர். பூஜா,
சென்னை - 1

(திருச்சி - கல்லணை சாலையில் உள்ளஊரின் பெயர்)

கிளிக்கூடு

-வி ரேவதி, தஞ்சை

யோசிக்கிறாங்கப்பா!

வாழ்க்கையிலே தப்புப் பண்ணினா 10 நிமிஷம் கண்ணை மூடி யோசிக்கணும்.
அப்பதான் பழியை யார் மேலே போடலாம்னு மனசு சொல்லும்.

நாகை பாபு,
கீழ்வேளூர்.

கேட்டது

(துறையூர் பேருந்துநிலையத்தில் இருவர்)


""உன்னோட மனைவி உன்கிட்டே எப்பவுமே கோபப்படமாட்டாங்களா? எப்படி?''
""ஆமாம்... "கோபப்பட்டா நீ வயசான மாதிரி தெரியுறே'ன்னு அவள்ட்ட சொல்லிவச்சிருக்கேன்''

துரை. இராமகிருஷ்ணன்,
எரகுடி.

(திருச்சி கே.கே.நகர் தேநீர்க் கடையில்இருவர்)

""எப்ப பார்த்தாலும் இப்படி பிளாஸ்க்கும் கையுமா அலையு றீயே...
எந்த ஆபீஸ்ல வேலை பார்க்கிறே?''
""வொர்க் ஃப்ரம் ஹோம்'தான். ஆபீஸ்ல தினமும் அஞ்சாறு டீ குடிச்சு பழகிப் போச்சு''

அ.சுஹைல்ரஹ்மான்,
திருச்சி.

மைக்ரோ கதை

ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்போது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய், ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.

அப்போது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றைத் தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உட்கார்ந்து கொண்டு எலும்புத் துண்டுகளை சுவைக்கத் தொடங்கியது.

சுவைத்துக் கொண்டே சத்தமாக, ""சிங்கத்தைக் கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது. ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயிறு நிறைந்து விடும்'' என்று கூறியது.

இதைக் கேட்ட சிங்கம், " அய்யோ... இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது' என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடிப் போனது.

இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்துக் கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நட்பை பெற்று வாழ்நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.

உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதைக் கவனித்த நாய், ஏதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது. குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்போது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறிக் கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்தியபடி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.

தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, ""இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே'' என்று உரக்க கூறியது.

இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எறிந்து விட்டு திரும்பிக் கூட பார்க்காமல் ஓடி விட்டது.

ஜி. மஞ்சரி,
கிருஷ்ணகிரி-1

எஸ்.எம்.எஸ்.


எல்லாருக்கும் நல்லவனாக இருக்க வேண்டும் என்றால்,
முதலில்அறிவுரைகள்... ஆலோசனைகள் கூறுவதை நிறுத்த வேண்டும்.

எஸ்.காந்திமதிநாதன்,
கோவில்பட்டி.

அப்படீங்களா!

குடிப்பழக்கம் மிக அதிகமாகிவிட்டதால் புற்றுநோய் பாதிப்பு உலக அளவில் அதிகமாகி இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.

"யுனிவர்சிட்டி ஆஃப் டொரோன்டோ'வைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

உலக சுகாதார நிறுவனம் உலக அளவில் ஆல்கஹால் பயன்படுத்துவதைப் பற்றி சேகரித்து வைத்திருந்த புள்ளிவிவரங்களையும், ஆல்கஹால் விற்பனையான அளவின் புள்ளி விவரங்களையும் அவர்கள் ஆராய்ந்தார்கள்.

மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய் ஆகியவை தோன்றுவதற்கான மூல காரணமாக, மது அருந்தும் பழக்கம் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். உடலில் ஏற்படுகிற சில வகைக் கட்டிகள் ஆல்கஹால் பயன்பாட்டால் புற்றுநோயாக மாறுவதையும் அவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

கரோனா வைரஸ் பாதிப்பினால் வீட்டில் முடங்கியிருக்கக் கூடிய சூழ்நிலை. ஏற்பட்டதால் உலக அளவில் மது அருந்தும் பழக்கம் அதிகமாகிவிட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மனித உடலுக்குள் செல்லும் மது, மரபணுக்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மனித உடலில் உள்ள ஆறு ஹார்மோன்களின் செயல்பாடுகளை மது பாதிக்கிறது. இதனால் குடல்புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் ஆகியவை ஏற்படுகின்றன.

மூளை, கழுத்து பகுதிகளில் கட்டி ஏற்படுகிறது என்பவையெல்லாம் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பில் தெரிய வந்திருக்கின்றன.

- என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com