முகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்
ஓட்டுக்கு திருப்பதி பிரசாதம்!
By - கோவீ. இராஜேந்திரன், மதுரை. | Published On : 07th November 2021 06:00 AM | Last Updated : 07th November 2021 06:00 AM | அ+அ அ- |

கோயில் பிரசாதங்களில் முதன்முதலாக 1999-ஆம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்றது திருப்பதி லட்டு பிரசாதம் தான்.
அவ்வளவு பிரசித்தி பெற்ற லட்டு பிரசாதத்தைக் கொடுத்து பஞ்சாயத்து போர்டு தேர்தலில் வாக்கு சேகரித்து அசத்தியுள்ளனர், ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரகிரி பஞ்சாயத்து தலைவர் தேர்தல் வேட்பாளர்கள் சிலர்.
தேர்தலில் வாக்காளர்களுக்கு திருப்பதி லட்டு கொடுத்து வாக்குச் சேகரித்தது இதுவே முதல் முறை. வாக்காளர்களின் வீட்டிற்கே வந்து திருப்பதி லட்டு கொடுத்து அசத்தியுள்ளனர்.