சிரி... சிரி...
By DIN | Published On : 14th November 2021 06:00 AM | Last Updated : 14th November 2021 06:00 AM | அ+அ அ- |

""என் புருசன் ஒரு எழுத்தாளரா இருக்கிறதால, தெருவுல பல வீட்டுக்கு வந்த திருடன் எங்க வீட்டுக்கு வரலை!''
""எழுத்தாளர்னா திருடன் கூடவா மதிக்கிறான்?''
""அப்படி இல்லே... விடிய, விடிய லைட்டைப் போட்டுக்கிட்டு என்
புருசன் எதையோ எழுதறதால வராமல் இருந்துட்டான்''
ஒருவர்: வீட்டுக்கு வந்தவரை வாங்கன்னு சொன்னால் அது பெருமை
மற்றவர்: வந்தவர், உடனே கிளம்புறேன்னு சொன்னா அது அதைவிடப் பெருமை
""காலம் எத்தனை வகைப்படும்?''
""நல்ல காலம்... கெட்ட காலம்னு இரண்டு வகை சார்''
""விடாதே பிடின்னு ஒருத்தர் சத்தம் போட்டால் என்ன அர்த்தம்?''
""அவர் விட்டுட்டார்னு அர்த்தம்''
""ராகு காலம் போகட்டும்... கடன் வாங்கலாம்''
""கடனுக்கும் ராகு காலத்துக்கும் என்ன சம்பந்தம்?''
""ராகுகாலத்தில் வாங்கினால் கடனைத் திருப்பிக் கட்டும்படி ஆயிடுது''
- ஏ. நாகராஜன்,
பம்மல்.
""இளவரசருக்கு சூட்டிய பெயருக்காக இவருக்கு பொன்னும், பொருளும் பரிசளித்திருக்கிறார் நம் மன்னர்!''
""அப்படியென்ன பெயர் சூட்டினார் ?''
""இரண்டாம் கரோனா வர்மன்!''
-வி. ரேவதி,
தஞ்சை.