மனித நேயப் பண்பாளர்!

அமெரிக்க நடிகையும், இயக்குநருமான ஏஞ்சலினா ஜோலி பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஜோன்வோய்ட், மர்செலின் பெர்ட்ரான்ட் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார்.
மனித நேயப் பண்பாளர்!

அமெரிக்க நடிகையும், இயக்குநருமான ஏஞ்சலினா ஜோலி பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஜோன்வோய்ட், மர்செலின் பெர்ட்ரான்ட் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார்.

குழந்தைப் பருவத்திலிருந்தே வாழ்க்கையின் கடினமான சவால்களை எதிர்கொள்ளும் பெண்ணாகவே அவர் வளர்ந்தார்.

14-ஆவது வயதில் மாடலிங் மற்றும் இசை ஆல்பங்கள் மூலம் வெளியுலகத் தொடர்பை பெற்றார். அந்த சமயத்தில் ஏஞ்சலினா ஜோலிக்கு போதைப் பழக்கம் தொற்றிக் கொண்டது.

தன்னுடைய 20 -ஆவது வயதில் போதைப் பழக்கத்துக்கு அடிமையான ஏஞ்சலினா இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். பின்னர், படிப்படியாக மனதைத் தேற்றிக் கொண்டு மீண்டும் நடிப்பதற்கான வாய்ப்பைத் தேடினார்.

1996-ஆம் ஆண்டு ஏஞ்சலினா ஜோலி நடித்த "லவ் இஸ் ஆல் தேர் இஸ்' மற்றும் "மொஜாவே மூன்' ஆகிய திரைப்படங்களும் பின்னர் நடித்த "டாம்ப் ரைடர்' படமும் வெற்றி பெற்றன.

அதனைத் தொடர்ந்து "கேர்ள்', "இண்டர்ரப்டட்', "மிஸ்டர் & மிசஸ் ஸ்மித்', "குங்ஃபூ பான்டா', "வான்டட்' போன்ற பல படங்களும் வெற்றி பெற்றன.

ஏஞ்சலினா ஜோலி இதுவரை மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும், இரண்டு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதுகளையும், ஓர் அகாதெமி விருதையும் வென்றிருக்கிறார்.

ஏஞ்சலினா ஜோலி தனது வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை அகதிகளுக்கும், சர்வதேசக் குழந்தைகள் தொண்டு நிறுவனத்துக்கும் அளிக்கும் மனித நேயப் பண்பாளராக இருக்கிறார். ஏஞ்சலினா அகதிகளுக்கான, ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் நல்லெண்ணத் தூதராகவும் செயல்பட்டு வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com