சிரி...சிரி...

""தலைவர் எதுக்கு முதுகுல எடுத்த எக்ஸ்ரேவை  பத்திரிகைகாரங்களை கூப்பிட்டு காண்பிக்கிறார் ?''""மாற்றுக்கட்சி தலைவர், தலைவரை பார்த்து.. முதுகு எலும்பு இல்லாதவர்னு சொல்லிட்டாராம்''
சிரி...சிரி...

""தலைவர் எதுக்கு முதுகுல எடுத்த எக்ஸ்ரேவை  பத்திரிகைகாரங்களை கூப்பிட்டு காண்பிக்கிறார் ?''
""மாற்றுக்கட்சி தலைவர், தலைவரை பார்த்து.. முதுகு எலும்பு 
இல்லாதவர்னு சொல்லிட்டாராம்''

""ஸ்கூல் டீச்சரை கல்யாணம் செய்து கொண்டது தப்பா போச்சு'' .
""ஏன் ?''
""ஏகப்பட்ட ஹோம் ஒர்க் கொடுக்கறா'' .

- தீபிகா சாரதி
சென்னை -5

மானேஜர்:  "யாரோ பேசறாங்க, என் மனைவி பேசறதா சொல்லி ரிசீவரை கொடுத்துட்டுப் போயிட்டியே?'
 பியூன் : "சாரி சார்... ரகுராமன் இருக்கானா ?'ன்னு கேட்டதும், உங்க மேடம்னு நினைச்சிட்டேன் சார் !'

""காசில்லாமல் சாப்பிட்டதுக்குத்தான்  மாவாட்டிக் கொடுத்துட்டேனே, எதுக்கு என்னோட போன் நம்பரை கேக்கறீங்க?"
"பயப்படாதய்யா... நீ அருமையா மாவாட்டிருக்கேன்னு சொன்னாங்க;  அதான் தேவைப்படும் போது கூப்பிட்டுக்கலாம்னு நம்பர் கேட்டேன்!"

- வி. ரேவதி,
தஞ்சை.    

""நம்ம வாழ்க்கைல சந்தோஷம் என்பது ராங் கால் மாதிரி...  எப்பவாச்சும் வரும்.. ஆனா கஷ்டம்....''
""நீயே சொல்லு...''
""ஆனா கஷ்டம்ன்றது  கம்பெனி கால்  மாதிரி... எப்பவும் வரும்....''

""கடவுளே எனக்கு நல்ல வேலை, பெரிய வீடு, காரு இதெல்லாம் குடு..''
""இப்ப நீ உண்டியல்ல போட்டியே அந்த 2 ரூபாய்க்கா இவ்வளவும் 
கடவுள்கிட்டே கேட்கிறே ?''

எம் ஏ நிவேதா, 
அரவக்குறிச்சிப்பட்டி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com