பேல்பூரி

""என்ன அந்த ஹெல்மெட் கடையில் பெண்கள் கூட்டம் அதிகமா இருக்கே?''""ஹெல்மெட்டில் பூ வைக்கிற கொக்கி வெச்சி தர்றாங்களாம்!''
பேல்பூரி

கண்டது

(தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊரின் பெயர்)

கலங்காத கண்ணாடி

-நெ.இராமகிருஷ்ணன்,
சென்னை.


(மயிலாடுதுறை- வடகரை மார்க்கத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

குளிச்சார்

- ம.ஸ்ரீகிருஷ்ணா, 
மேலமங்கைநல்லூர்.


(கூடங்குளத்தில் உள்ள நாகர்கோவில் சாலையில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

நரிப்பாதை


- கே.பிரபாவதி,
மேலகிருஷ்ணன்புதூர்.

கேட்டது


(தென்காசியில் நண்பர் வீட்டில்...)

""என் மனைவி காபி தரும்போதெல்லாம் நீங்க ஏன் வேண்டாமுன்னு சொல்றீங்க  அத?''
""காபி குடிச்சவங்கதான் டம்பளரை கழுவி வைக்கணும்னு உங்க மனைவி ஆர்டர் இருக்குல்ல. அதற்காகத்தான்''

-கு.அருணாசலம், 
தெந்காசி. 


(சிதம்பரம் கடைத்தெருவில் இருவர் பேசிக் கொண்டது)

""என்ன அந்த ஹெல்மெட் கடையில் பெண்கள் கூட்டம் அதிகமா இருக்கே?''
""ஹெல்மெட்டில் பூ வைக்கிற கொக்கி வெச்சி தர்றாங்களாம்!''

-பி.கவிதா, 
சிதம்பரம்.

(திருச்சி ஜவுளிக்கடை ஒன்றில்)

""என்ன சார். ஒரு மணி நேரமா ஜவுளி பார்த்துகிட்டு இருக்கீங்க? எதுவும் எடுக்க காணோமே?''
""கொஞ்சம் பொறுப்பா! வீட்டில் இருந்து என் மனைவி வந்துட்டு இருக்கா. வந்ததும் அவகிட்ட பொறுப்பை ஒப்படைக்கிறேன்.''

-அ.சுஹைல்ரஹ்மான், 
திருச்சி.

யோசிக்கிறாங்கப்பா!

அடக்கப்படாத மனம் நம்மை கீழ்நோக்கியே இழுத்துச் செல்லும்.

-மு.பெரியசாமி, 
விட்டுக்கட்டி.

மைக்ரோ கதை

அன்று மாநகரில் மிகப்பெரிய அரங்கில் நடைபெற்ற இலக்கிய விழாவில்,  "அம்மா' என்ற தலைப்பில் மூன்று மணி நேரம் அருமையாப் பேசினார் சிறப்புப் பேச்சாளர் மணிமாறன்.  கேட்ட பலரின் கண்கள் கலங்கின. அம்மாவின் தியாகம், பாசம், இன்றைய பிள்ளைகளின் உதாசீனம்.. என அடுத்தடுத்து பேசியது பலரும் பாராட்டும் வண்ணம் இருந்தது.  அவரது சொற்பொழிவு விழா ஏற்பாட்டாளர்களும் பாராட்டி, உரிய சன்மானத்தை அளித்து வழியனுப்பி வைத்தனர்.

பின்னர், அவர் தனது காரில் சொந்த ஊருக்குள் நுழைந்ததும், மூன்றாவது தெருவில் இருக்கும் ஒரு கட்டடத்தின் முன் காரை நிறுத்தச் சொன்னார். 

பின்னர் அவர் கார் ஓட்டுநரிடம், ""கொஞ்சம் இருப்பா. உள்ளே போயிட்டு என் அம்மாவைப் பார்த்துட்டு வந்துடுறேன்'' என்றார்.

அந்தக் கட்டடத்தின் முகப்பில் "அன்பு முதியோர் இல்லம்' என எழுதப்பட்டிருந்தது.

-இரா.சிவானந்தம், 
கோவில்பட்டி.

எஸ்எம்எஸ்

காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கவலைப்படாதே!

-கீதா கற்பகம்,
சேலம்.

அப்படீங்களா!


வாட்ஸ் ஆஃப்பில் தவறுதலாக அழிக்கப்பட்ட தகவலைப் திரும்பப் பெறும் புதிய வசதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கு அனுப்பிய தகவலை அழிக்கவே முடியாத நிலைதான் தொடக்கத்தில் இருந்தது.  பின்னர்,  அனுப்பிய தகவலை சிறிது நேரம் கழித்து அழிக்கும் சேவையை வாட்ஸ் ஆஃப் அளித்தது. 

பின்னர்,  குழுவோ அல்லது தனி நபருக்கோ அனுப்பிய தகவலை இருவருக்கோ அல்லது அனுப்பியவர் மட்டுமோ அழிக்கும் புதிய சேவையை அளித்தது.  பின்னர்,  இரண்டு நாள்கள் கழித்தும் அழிக்கும் அளவுக்கு கால அளவை நீட்டியது. இதில் இருவருக்கும் அழிக்கவும், அனுப்பியவருக்கு மட்டும் அழிக்கவும் தற்போது வசதி உள்ளது. 

தவறுதலாக மற்றுவருக்கு அனுப்பிய தகவலை அழிக்கும்போது, தவறுதலாக "டெலிட் பார் மீ' என்ற சேவையை தேர்வு செய்துவிட்டால் அனுப்பியவரின் வாட்ஸ் ஆஃப்பில் இருந்தே அந்தத் தகவல் அழிந்துவிடும். 

அந்தத் தகவல் கிடைக்கப் பெற்றவரிடம் இருந்து அதை அழிக்கவே முடியாத நிலை இருந்தது. இதனால் தவறுதலாக தகவலை அனுப்பியவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இதைப்போக்க "டெலிட் பார் மீ'  என்ற முறையில் தகவலை அழித்துவிட்டால், 5 விநாடிகளில் மீண்டும் அதைப் பெறும் (அன்டூ) சேவையை வாட்ஸ்ஆஃப் அறிமுகம் செய்துள்ளது. 

"ஆக்ஸிடென்டல் டெலிட்' என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. தொடர் தகவல் பரிமாற்றத்திலும், அவசரஅவசரமாக தகவல் பரிமாற்றத்திலும் ஈடுபடுபவர்களுக்கு இந்த புதிய சேவை அவசிய தேவையாக இருக்கும்.  

-அ.சர்ப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com