பேல்பூரி

இது முகக் கவசம் மட்டுமல்ல;ஆயுள் உங்கள் வசம்.அவசியம் வைத்திருப்பீர் உங்கள் கைவசம்.
பேல்பூரி

கண்டது

(தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் ரோட்டில் அமைந்துள்ள ஓர் உணவகத்தின் பெயர் )

பிளான் பண்ணி
சாப்பிடலாம்... வாங்க!

- ச.ஜான்ரவி,
கோவில்பட்டி.

(விருகம்பாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)

தாயார் சிற்றுண்டி, தேநீரகம்

அ. பச்சைப்பெருமாள்,
சென்னை - 87.

(மயிலாடுதுறையில் முகக்கவசம் விற்கும் ஒரு கடையில்)

இது முகக் கவசம் மட்டுமல்ல;
ஆயுள் உங்கள் வசம்.
அவசியம் வைத்திருப்பீர் உங்கள் கைவசம்.

க.பன்னீர்செல்வம்,
மாப்படுகை.

கேட்டது


(நாகர்கோவில் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில், கடைக்காரரும் வாடிக்கையாளரும்)

""என்ன சாப்பிட்டீங்க?''
""நான்கு பருப்பு வடை, ஒரு இட்லி''
""என்ன மாற்றி சொல்றீங்க...தெளிவாதான்இருக்கீங்களா...?''
""என்ன இப்படி கேட்டிட்டீங்க? வடை மாதிரி இட்டிலியும் , இட்டிலி மாதிரி வடையும் இருந்தால் எப்படி சொல்றதாம்?''

மகேஷ் அப்பாசுவாமி,
பனங்கொட்டான்விளை.

(திருச்சி ஜெராக்ஸ் கடைஒன்றில் இருவர்)

""பக்கத்துக்கு எவ்வளவுப்பா?''
""ஒரு ரூபாய்''
""தூரத்துக்கு?''

பா.சிவானந்தம்,
திருச்சி.

யோசிக்கிறாங்கப்பா!

அதிக நேரம் இருக்காது அதிர்ஷ்டம்
நீண்ட தூரம் வராது சிபாரிசு
எப்போதும் கிடைக்காது உதவி
எப்போதும் ஜெயிக்கும் தன்னம்பிக்கை.

- கே.முத்தூஸ்,தொண்டி.

மைக்ரோ கதை


அரசனின் கனவில் அடிக்கடி மூன்று எலிகள் தோன்றி தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்தன. அதில் ஒன்று கொழுத்த எலி, ஒன்று மெலிந்த எலி, இன்னொன்று எந்நேரமும் தூங்கிக் கொண்டிருக்கும் எலி.

தன் கனவுக்கு விளக்கம் கேட்டு அரசன் அவையினரைத் தொந்தரவு செய்தான். யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் மக்கள் யாராவது சரியான பதில் சொன்னால், உரிய சன்மானத் தொகை தருவதாக தண்டோரா போட்டு அறிவிக்கச் செய்தான்.

ஆனாலும் மக்கள் யாரும் முன் வரவில்லை. மன்னனிடம் சொல்லும் பதிலைத் தவறு என்று அரசன் கருதினான் என்றால் அவன் கொடுக்கும் கடுமையான தண்டனைக்குப் பயந்தே யாரும் பதில் சொல்லத் துணியவில்லை.
இந்நிலையில் ஒரு மூதாட்டி அரசனின் கனவுக்கு விளக்கம் சொல்ல தைரியமாக முன் வந்தாள்.

அதிரடியாக தனது பதிலைச் சொன்னாள்:

""மன்னா நீ கனவில் கண்ட கொழுத்த எலி வேறு யாரும் அல்ல. இந்த சபையில் உள்ள மந்திரிகளும் பணியாளர்களும் தான். மெலிந்த எலி நாட்டில் வாழும் ஏழை மக்கள்'' சற்று நிறுத்தினாள் மூதாட்டி.

மூதாட்டியின் விளக்கத்தால் திருப்தி அடைந்த மன்னன் ஆர்வமாகக் கேட்டான்:
""அப்படியானால் தூங்கிக் கொண்டு இருக்கும் அந்த எலி?''

மூதாட்டி சொன்னாள்:

""அது வேறு யாருமல்ல. நீ தான் மன்னா''

ஆர்.அஜிதா,
கம்பம்.

எஸ்எம்எஸ்


வழக்கமாகப் பேசும் வார்த்தைகளை விட
வாயிலிருந்து வழுக்கி விழும் வார்த்தைகளே...
ஆபத்தை உருவாக்குகின்றன.

- பா.சக்திவேல்
கோயம்புத்தூர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com