பேல்பூரி

""கடை உரிமையாளர்னு எழுதி மூன்று பெயரை எழுதியிருக்காங்களே?''""நாம சரியா வேலை செய்யலைன்னா இந்த 3 பேரும் நம்மளை உரிமையா திட்டுவாங்க''
பேல்பூரி

கண்டது

(திருச்சி மலைக்கோட்டை அருகேஒரு சுவரொட்டியில்)

எம் அசோக் ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.

(தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டியிலுள்ள ஒரு துணிக்கடையின் பெயர்)

வீடே கடை மகளிர் ஆடையகம்

ச.அரசமதி, தேனி.

(திருநெல்வேலி டவுனில் ஒரு தெருவின் பெயர்)

தடிவீரன் தெரு

ஜானகி பரந்தாமன்,
கோயம்புத்தூர்-36.

(திருவாடானை தாலுகாவில் உள்ள ஒரு சிற்றூரின் பெயர்)

முயல்குட்டி வயல்

- கா.அஞ்சம்மாள்,
திருவாடானை.

கேட்டது


(பொறையார் மளிகைக்கடை ஒன்றில்)

""கடை உரிமையாளர்னு எழுதி மூன்று பெயரை எழுதியிருக்காங்களே?''
""நாம சரியா வேலை செய்யலைன்னா இந்த 3 பேரும் நம்மளை உரிமையா திட்டுவாங்க''

சரஸ்வதி செந்தில்,
பொறையார்.

(ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சி செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநரும், ஒரு பயணியும்)

""சார்... பார்த்தால் படிச்சவராட்டம் இருக்கீங்க ... டிக்கெட் எடுக்காம உட்கார்ந்து இருக்கீங்களே?''
""ஓ... அப்படின்னா படிக்காதவங்க டிக்கெட் எடுக்க வேண்டியதில்லையா? மகளிர்க்குதான் இலவசம்னு நினைச்சேன். படிக்காதவங்களுக்கும் இலவசமா?''

ஆர்.பிரசன்னா,
ஸ்ரீரங்கம்.


யோசிக்கிறாங்கப்பா!

விஷமும், வேஷமும் ஒன்றுதான் !
விஷம் உயிரைக் கொல்லும்;
வேஷம் மனதை கொல்லும்!

- வ.வெற்றிச்செல்வி,
வேதாரண்யம்.


மைக்ரோ கதை


அன்று வகுப்பில் ஆசிரியர் குட்டித் தேர்வு ஒன்றை நடத்தினார். இரண்டு இரண்டு கேள்விகளைக் கேட்டு விரிவாகப் பதில் எழுதும்படி சொன்னார். தேர்வு முடிந்ததும், விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர், பதில்களைப் படிக்காமலேயே சிலருக்கு 100 மதிப்பெண்களும், சிலருக்கு 50 மதிப்பெண்களும் வழங்கினார். திடுக்கிட்ட மாணவர்கள், ""அதெப்படி சார் பதில்களைப் படிக்காமலேயே மார்க் போடலாம்?'' என்று கேட்டனர். அதற்கு ஆசிரியர் சொன்னார்:
""கடினமான கேள்வி ஒன்றும் இலகுவான கேள்வி ஒன்றும் தான் கேட்டேன். கடினமான கேள்வியைச் சிலரும், இலகுவான கேள்வியைச் சிலரும் தேர்ந்தெடுத்து பதில் எழுதி உள்ளீர்கள். கடினமான ஒன்றை வாழ்வில் எதிர்கொள்ளும் தைரியம் இருக்கிறதே அதற்குத்தான் 100 மதிப்பெண்கள். இலகுவான கேள்வியைத் தேர்ந்தெடுத்த மனநிலைக்காகவே 50 மதிப்பெண்கள்.
நீங்கள் எழுதிய பதில்களுக்காக அல்ல. கடினமாக உழைப்பதற்குப் பயப்படாதவர்களே வாழ்வில் முன்னுக்கு வரமுடியும் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதற்காகவே 100 மதிப்பெண்கள்'' என்றார்.

மல்லிகா அன்பழகன்,
சென்னை-78.

எஸ்எம்எஸ்


காதல் என்பது
கரண்ட் போன நேரத்தில் வரும்
கொசு மாதிரி.
தூங்கவும் முடியாது; துரத்தவும் முடியாது.

நாகை பாபு,
கீழ்வேளூர்.

அப்படீங்களா!


கரோனா தொற்றின் காரணமாக பொது நூலகங்கள் மூடப்பட்டுவிட்டதால், புத்தக ஆர்வலர்களுக்கு இந்த தெரு நூலகங்கள் பெரிதும் பயன்பட்டன.
தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, தெருவோரத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த நூலகங்களை தெருவில் உள்ள வீட்டுக்காரர்களே தங்கள் வீட்டின் முன் அமைத்திருக்கிறார்கள்.
தெருவில் போகும் யார் வேண்டுமானாலும் புத்தகத்தை எடுத்துச் செல்லலாம். தங்கள் இருப்பிடத்தில் வைத்துப் படித்துவிட்டு, திரும்பவும் அந்த நூலகத்தில் வைக்கலாம். அல்லது அதேபோன்று வேறொரு தெருவில் உள்ள வேறொரு நூலகத்திலும் அந்தப் புத்தகத்தை வைக்கலாம்.
ஒரு புத்தகத்தை எடுத்துச் சென்று படித்தவர், தன் வீட்டில் உள்ள நிறைய புத்தகங்களைத் தெரு நூலகத்தில் வைக்கலாம்.
பொதுநூலகங்களில் எடுத்த புத்தகங்களை திருப்பிக் கொடுக்கும்போது காலம் தாழ்த்திக் கொடுத்தால் விதிக்கப்படும் அபராதம் போன்ற நடைமுறைகள் எதுவும் இந்த தெரு நூலகங்களைப் பொருத்தவரையில் அறவே இல்லை.
ஆஸ்திரேலியாவில் 3000 தெரு நூலகங்கள் உள்ளன. மெல்போர்னில் 525 தெரு நூலகங்களும், விக்டோரியாவில் 650 தெரு நூலகங்களும் உள்ளன.

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com