பேல் பூரி

""டேய்.. நீ இப்போவே படிச்சு நல்ல மார்க் வாங்கணும். இல்லாட்டி நடுத்தெருவுல நிற்பாய்''
பேல் பூரி


கண்டது

(மயிலாடுதுறை கல்லணை சாலையில் உள்ள கதிராமங்கலத்தில் ஒரு கடையின் பெயர்)

நிம்மதி ஓட்டல்

- சங்கீத சரவணன்,
மயிலாடுதுறை.

(நாகர்கோவில் பிள்ளையார்புரத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையின் பெயர்)

மக்கா லேய்

- ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.

(திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

மண்ணக்குமுண்டான்

-கனக.கந்தசாமி, 
முத்துப்பேட்டை.

கேட்டது


(நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே தந்தையும் மகனும் பேசியது)

""டேய்.. நீ இப்போவே படிச்சு நல்ல மார்க் வாங்கணும். இல்லாட்டி நடுத்தெருவுல நிற்பாய்''
""எனக்கு அதுதான்பா ஆசை. டிராபிக் கான்ஸ்டபிள் ஆகணும்னு)

-டி.மோகனதாஸ்,
நாகர்கோவில்.

(சிதம்பரம் சந்நிதி தெருவில் இருவர் பேசிக் கொண்டது)


""குடும்பம்னா முன்ன பின்ன இருக்கும்தான்''
""அதுசரி. முன்னாடி ஒரு குடும்பம். பின்னாடி ஒரு குடும்பம் இருந்தா எப்படி?''

-பி.கவிதா,
சிதம்பரம்.

(கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் காதலர்கள் பேசிக் கொண்டது)

""என் மனம் செல்போன். நீதான் அதன் சிம்கார்டு''
""ஆஹா. ரொம்ப மகிழ்ச்சி''
""ஆஃபர் கிடைச்சா வேற சிம்கார்டு போட்டுக்குவேன். சரியா?''

-உமர்,
கடையநல்லூர்.

யோசிக்கிறாங்கப்பா!


கண்தானம் செய்ய மறுக்கும் ஊர்- ஐ "தரா' பாத்!

- ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்.

மைக்ரோ கதை


ஒரு  ஓடும் பேருந்தில் காலியாக இருந்த ஓர் சீட்டில் அமர இரு பெண்கள் போட்டிப் போட்டுகொண்டு சண்டையிட்டனர். சண்டையால் பேருந்தில் இருந்த பயணிகளின் பார்வை இருவரையும் நோக்கியே இருந்தது. பலரும் சமரசம் செய்தும், சண்டை தீரவில்லை. குழாயடி சண்டை அளவுக்கு வாசகங்கள் வரத் தொடங்கின.

அப்போது பேருந்து நடத்துநரும் சமரசம் செய்தும் தீரவில்லை. உடனே அவர் சொன்னார்:

""ஏம்மா. உங்களில் யார் பெரியவங்களோ அவங்க உட்காந்து வாங்க..!  சின்னவங்க நின்னுட்டு வரலாமில்லே'' என்றார்.

அப்புறம் இரு பெண்களின் சண்டை நின்றுவிட்டது. இருவருமே நின்றுகொண்டே வந்தனர். சீட்டும் காலியாகவே இருந்தது.

அங்கிருந்த பயணி ஒருவர், ""இந்த ஐடியா நமக்கு வராம போயிட்டதே'' என்றார். 

நடத்துநரும்  பயணிகளின்  பார்வையில் கிடைத்தப் பாராட்டுதல்களோடு,  புன்னகையோடு பூரித்தார்.  

- குடந்தை மோகனா அம்பி

எஸ்.எம்.எஸ்.


நமக்கான ஆறுதல் என்பது நம்மிடம்தான்! 
மறந்து போவதும்.. கடந்து செல்வதும்...

-ப.சரவணன்,
ஸ்ரீரங்கம்.

அப்படீங்களா!


புகைப்படம்,  விடியோக்களை பகிர்வதற்காக 2010-இல் உருவாக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் செயலியில் "ரீல்ஸ்' எனும் சிறு விடியோக்கள் பதிவால் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது. 
13 வயதுக்குள்பட்டவர்கள் இந்த இன்ஸ்டாகிராமில் சேரலாம் என்பதுதான் இதன் சிறப்பாகும். ஃபேஸ்புக் நிறுவனமான மெட்டாவின் இந்தச் செயலியில் 13 வயதுக்கு குறைந்த சிறார்களும் வயதை மறைத்து இளைஞர்களைப் போல் நுழைந்து அவர்களின் பதிவுகளை பார்த்துவருவது மேற்கத்திய நாடுகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
இதனால் பயன்பாட்டாளர்கள் தங்களின் 18 வயதை உறுதி செய்தால்தான் இளைஞர்களின் பதிவுகளை பார்க்க முடியும். இதற்காக  மூன்று விதிமுறைகளை இன்ஸ்டாகிராம் சோதிக்கக் தொடங்கி விட்டது. பயன்பாட்டாளர் தனது வயதை உறுதி செய்ய அடையாள அட்டையை பதிவிட வேண்டும் அல்லது மூன்று இளைஞர்கள் பயன்பாட்டாளரின் வயதை உறுதிப்படுத்த வேண்டும் அல்லது பயன்பாட்டாளரே விடியோ பதிவின் மூலம் தனது வயதை உறுதி செய்ய வேண்டும். 
இந்த விடியோவில் உள்ள முகபாவங்களை ஆய்வு செய்து அவரது வயதை இறுதி செய்து 18 வயதுக்கும் மேல் என்ற அனுமதியை இன்ஸ்டாகிராம் வழங்கும். பயன்பாட்டாளர்களின் விடியோ, அடையாள அட்டை ஆகியவற்றின் தகவல்கள் 30 நாள்களில் அழிக்கப்படும் என்று இன்ஸ்டாகிராம் உறுதி அளித்துள்ளது.
எனினும், வயதை உறுதி செய்தால் மட்டும்போதாது, சிறார்களின் கணக்குகளின் தேடுதல் விவரங்களை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்கவும், பதிவிடும் தகவல்கள் பாதுகாப்பாக வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கடந்த 23-ஆம் தேதி முதல் இந்தச் சோதனை தொடங்கிவிட்டது. விரைவில் இந்தியாவிலும் வந்துவிடும்.

-அ.சர்ப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com