கவித்துவமான நூல்கலை

நூல், ஆணிகளைக் கொண்டு கலைநயமான ஓவியங்களை வரைகிறார் கோவையைச் சேர்ந்த ஞானகிருபா. கவித்துவமான இந்தக் கலை ஓவியங்கள் காண்போரின் கண்களைக் கவருகின்றன.
கவித்துவமான நூல்கலை


நூல், ஆணிகளைக் கொண்டு கலைநயமான ஓவியங்களை வரைகிறார் கோவையைச் சேர்ந்த ஞானகிருபா. கவித்துவமான இந்தக் கலை ஓவியங்கள் காண்போரின் கண்களைக் கவருகின்றன.

உலகில் கலைகளுக்கு என்றுமே மதிப்பு உண்டு. கலைகள் நாம் பார்த்து மகிழ்வதற்கு மட்டுமில்லாமல் நமது மனதில் புத்துணர்ச்சியை ஊட்டுவதற்கும் உதவுகின்றன.
அதிலும் குறிப்பாக ஓவியக் கலையின் பல்வேறு பிரிவுகள் நமது எண்ணத்தைப் பிரதிபலிப்பதுடன் இல்லத்தை அலங்கரிக்கவும் பயன்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை ஓவியங்கள், பிரம்மாண்டத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன. அந்த வகையில் 19-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய, நூல் கலை என்று அழைக்கப்படும் ஸ்ட்ரிங் ஆர்ட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது.
ஆங்கிலப் பெண் மேரி
எவரெஸ்ட் பூல், குழந்தைகளுக்கு கணிதம் கற்பிக்க உதவுவதற்காக "வளைவு தையல்" எனப்படும் நூல் கலையின் ஒரு வடிவத்தைப் பயன்படுத்தினார். இந்த செயல்முறை சக கணிதவியலாளரான பியாரி பேசிரைப் பாதித்தது, அவர் 1962-இல் பேசிர் வளைவை உருவாக்கினார்.
1960- களின் பிற்பகுதியில் தங்கள் சுவர்களுக்கு வீட்டில் நூல் கலையை உருவாக்க கருவிகளைப் பயன்படுத்திய பொழுதுபோக்கு ஆர்வலர்களுக்கு இது ஒரு மோகத்தைத் தாக்கமாக்கத் தொடங்கியது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றைய சமகால கலைஞர்கள் நூல் கலையின் பயன்பாட்டைத் தொடர்ந்து புதுமைப்படுத்தி இருக்கிறார்கள், இந்த அடக்கமான பொருள் கலை எல்லைகளைக் காட்டவில்லை என்பதை நிரூபிக்கிறது.
நூல் கலையின் கணிதத் தோற்றத்தால் ஈர்க்கப்பட்டு, ஆஸ்திரேலியக் கலைஞரான நைக் சவ்வாஸ் தனது உடல் ரீதியாக மூழ்கும் மற்றும் ஒளியியல் திகைப்பூட்டும் நிரவல்களுக்கு பிரபலமானவர். அவரது பெரிய அளவிலான படைப்புகள் குறிப்பிட்ட வடிவியல் சூத்திரங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, இதன் விளைவாக முப்பரிமாண மர கட்டமைப்புகள் வண்ணமயமான கம்பளி வடிவியல் வடிவங்களில் மூடப்பட்டிருக்கும்.
இந்த நூல் கலையில் மிகச் சிறந்து விளங்கும் கோவை புலியகுளத்தைச் சேர்ந்த எஸ்.ஞானகிருபாவைச் சந்தித்தோம். இனி அவர் கூறியது:
நூல் கலை என்பது ஒரு பலகையில் குறிப்பிட்ட கணக்குப்படி ஆணி அடித்து அதில் நூல் கொண்டு டிசைன் செய்வதுதான். எவ்வளவு ஆணி அடிப்பது, எப்படி நூலைப் பயன்படுத்துவது என்பது தொடர்பாக சில விதிமுறைகள் உள்ளன. பெயர்ப்பலகைகள், குழந்தைகளைக் கவரும் வித, விதமான பொம்மைகள், பெரியவர்களையும் கவரும் படகு டிசைன்கள், மனதைக் கொள்ளை கொள்ளும் வண்ண வண்ணப் பூக்கள், துள்ளியோடும் புள்ளி மான்கள், இயற்கை எழில் கொஞ்சும் பசுமை வனப்புகளைக் கொண்டு வரும் வனங்கள், மனதை உற்சாகப்படுத்தும் மண்டேலா டிசைன்கள், கடவுளின் உன்னதப் படைப்பான மனிதர்களின் முகங்கள் என எதை வேண்டுமானாலும் நூல் மற்றும் ஆணி கொண்டு அழகாக வடிவமைத்து நம் கண் முன்னே கொண்டு வர முடியும்.
தரமான பொருள்களைக் கொண்டு உருவாக்குவதால் நீண்ட நாள்களுக்கு நூல்களின் வண்ணம் அப்படியே இருக்கும். தஞ்சாவூர் ஓவியங்களுடன் ஒப்பிடும்போது நூல் கலையின் விலையும் குறைவுதான் என்றார்.
பி.காம்., முடித்து எம்.பி.ஏ. முடித்துள்ள ஞானகிருபா, இதைத் தனது தோழி ஒருவர் மூலம் கேள்விப்பட்டு நேரம் ஒதுக்கி வலைதளத்தில் பார்த்து டிசைன் செய்யத் தொடங்கியதாகத் தெரிவித்தார்.
சாதாரண டிசைன்களுக்கு 2 நாள்கள் ஆகும் எனத் தெரிவித்த அவர் ஒருவரின் முகத்தை டிசைன் செய்வதற்குக் குறைந்தது 10 முதல் 15 நாள்கள் வரை ஆகும். ஆனால் அவருடைய முகம் புகைப்படம் எடுத்தது போலவே இருக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப நூல் கலை ஓவியங்களைக் கொடுத்து வருவதாகத் தெரிவித்த அவர் சிறுவர், சிறுமியர், பெரியவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
பலகையில் ஆணி அடிப்பதற்கும் ஆணிகளுக்கு இடையே நூல்களைக் கொண்டு டிசைன் செய்வதற்கும் கற்றுக் கொண்டால் இந்தக் கலை எளிதில் வசமாகும். அதற்காக வகுப்பகளையும் நடத்தி வருவதாக ஞான கிருபா தெரிவித்தார். இந்தக் கலையைக் கற்றுக் கொள்பவர்கள் கணிதப் பாடத்தில் சிறந்து விளங்குவதாகக் கூறப்படுவது கூடுதல் சிறப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com