பேல்பூரி

""மாடு படம் வரைஞ்சிருக்கே... வாய் ஏன் வரையல...?''""அப்பா சொன்னார். அது வாயில்லா பிராணின்னு....!''
பேல்பூரி

கண்டது


(நாகை மாவட்டம் ஆயக்காரன்புலத்தில் ஓர் ஹோட்டலின் பெயர்)

""பெரும்பாட்டன் ராவணன் உணவகம்''

-ப.விஸ்வநாதன்,
கீரமங்கலம்.

(புவனகிரியில் முடிதிருத்தும் நிலையத்தில் எழுதப்பட்ட வாசகம்)

சொந்த சீப்பில் தலைசீவிக் கொள்ளவும்.

-பி.கவிதா,
சிதம்பரம்.

(குமரி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

வேர்க்கிளம்பி

-கே.பிரபாவதி,
மேலகிருஷ்ணன்புதூர்.

கேட்டது


(திருநெல்வேலி பஸ் நிலையம் அருகே மாணவர்கள் பேசியது)

""மாடு படம் வரைஞ்சிருக்கே... வாய் ஏன் வரையல...?''
""அப்பா சொன்னார். அது வாயில்லா பிராணின்னு....!''

-ஆர்.ஜெயலட்சுமி,
திருநெல்வேலி.

(அரக்கோணம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற உரையாடல்)

""பாட்டி! இந்த பஸ் "பிடிச்சா'தான் நீங்க சரியான நேரத்துக்கு வீட்டுக்கு போக முடியும்''
""அப்படியா... எனக்கு இந்த பஸ் பிடிச்சிருக்குப்பா...!''

-நா.வினோத்குமார்,
பாராஞ்சி.

(திருச்சி ரயில் நிலையத்தில் இரு நண்பர்கள் பேசியது)

""உன் மனைவிக்குத் தெரியாமல் பணத்தை எங்கே வைப்பாய்?''
""கிச்சனில்தான்... என் மனைவி இங்கே வர சான்úஸ இல்லை.''

-எம்.ஏ.நிவேதா,
அரவக்குறிச்சிப்பட்டி.

யோசிக்கிறாங்கப்பா!

"அன்பு'  என்பது "நெல்' மாதிரி. போட்டாதான் முளைக்கும்.
"வம்பு' என்பது "புல்' மாதிரி. எதுவும் போடாமலேயே முளைக்கும்.

-சென்னை ஆதவ்

மைக்ரோ கதை


செல்வந்தர் ஒருவர், மாதுளம் பழத்தை ருசித்து தின்று கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர் வந்தார். நண்பரிடம் செல்வந்தர், ""மாதுளை உடலுக்கு நல்லது. கொஞ்சம் சாப்பிடுங்க..'' என்றார். தனக்கு மாதுளம் பிடிக்காது என்று தெரிந்தும் சொன்ன செல்வந்தரிடம் நண்பர் கோபமுற்று, "" நம்மூர் கொய்யாப் பழத்துக்கு ஈடாகுமா இந்த விலை உயர்ந்த மாதுளம் பழம்'' என்றார். பின்னர், மாதுளையைப் பறித்து தூக்கி எறிந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு நாய், மாதுளையை நுகர்ந்துவிட்டு  சாப்பிடாமல் சென்றுவிட்டது.  நண்பரின் முகத்தில் சந்தோஷம்.

""பார்த்தீங்களா... உங்கள் மாதுளையை நாய் கூட சாப்பிட மறுத்துவிட்டது'' என்றார்.

இதற்கு செல்வந்தர், ""ஆம் நாய்கள் மாதுளையை சாப்பிடாது. எனக்குத் தெரியும்'' என்றார்.

-கே.சுப்பராயன்,
மதுரை.

எஸ்எம்எஸ்

இருப்பதை இழந்த பிறகுதான் இல்லாததின் அருமை தெரியும்.

-சங்கீத சரவணன்,
மயிலாடுதுறை.

அப்படீங்களா!

வாட்ஸ்  ஆப்பில் பகிரப்படும் தகவல்களின் விவரங்கள் அதன் இணை நிறுவனங்களான ஃபேஸ் புக்,  இன்ஸ்டாகிராமுக்கும்  தேவைக்கேற்ப பயன்படுத்தப்படும் என்று வெளியான புதிய விதிமுறைகளால் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. 

இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை வகுத்து,  தனிநபர் தகவல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கடிவாளம் போட்டது.  எனினும், வாட்ஸ் ஆப்பில் பகிரப்படும் தகவல்கள் பாதுகாப்பானதாக இருக்கும் என்று அந்த நிறுவனம் உறுதி அளித்தது.

இழந்த வாடிக்கையாளர்களை மீண்டும் பெற வாட்ஸ் ஆப் புதிய சேவைகளை அறிவித்து வருகிறது.  

இதன்படி,   பிறருக்கு அனுப்பிய தகவல் தேவையில்லை என்றால், அ னுப்பிய ஒரு மணி நேரம்-  8 நிமிஷம்- 16 நொடிகளில் அழித்துவிடலாம் என இருந்தது. 2018-இல் முதன் முதலில் தொடங்கப்பட்ட இந்தச் சேவைக்கு 7 நிமிஷம் மட்டுமே இடைவெளி வழங்கப்பட்டிருந்தது.  அதன் பின்னர்,  நேரம் அதிகரிக்கப்பட்டது.

தற்போது இரண்டு நாள் 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  வாட்ஸ் ஆப் பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு சோதனையின் அடிப்படையில் அளிக்கப்பட்டு வந்த இந்தப் புதிய சேவை, சாதாரண பயன்பாட்டாளர்களுக்கும் செயல்படத் தொடங்கிவிட்டது. 

இரண்டு நாள்கள் கழித்து அழித்தாலும்,  தகவல் அழிக்கப்பட்டது என்ற விவரம் மட்டும் இடம்பெற்றிருக்கும்.   அழிப்பதற்குள் அந்த நபர் தகவலை படித்துவிட்டிருந்தால் எதுவும் செய்ய முடியாது.  சர்ச்சைக்குரிய தகவல்களை அனுப்பியவுடன் அழித்தாலும், அரசு கோரினால் வாட்ஸ் ஆப்  வழங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com