குத்துச்சண்டை உலக சாம்பியன்

தெலங்கானா நிஸாமாபாத் விநாயக் நகரில் வாழும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நிகத் ஸரீன் உலக குத்துச் சண்டை போட்டியில்சாம்பியனாகியிருப்பது பெரிய வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
குத்துச்சண்டை உலக சாம்பியன்


தெலங்கானா நிஸாமாபாத் விநாயக் நகரில் வாழும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நிகத் ஸரீன் உலக குத்துச் சண்டை போட்டியில் சாம்பியனாகியிருப்பது பெரிய வியப்பை ஏற்படுத்தியுள்ளது. குத்துச்சண்டையில் உலக சாம்பியன்களான இந்திய வீராங்கனைகள் மேரி கோம், சரிதா தேவி, ஜென்னி, லேகா வரிசையில் அடுத்தபடியாக ஐந்தாம் வீராங்கனையாக நிகத் சேர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

""குத்துச்சண்டை பயிற்சியில் சேர்ந்ததே பல எதிர்ப்புகளைச் சமாளித்துத்தான். எனக்கு வயது 25 .

வீட்டில் நான் கடைக்குட்டி. சிறுவயதில் தோழிகளுடன் சண்டை வந்தால் விடமாட்டேன். அதனால் குத்துச்சண்டை என்னைக் கவர்ந்தது. பயிற்சியில் சேர்த்துவிட அப்பா முன்வந்தாலும் அம்மா தடுத்தார்.

"குத்துச்சண்டையில் சாதனை புரிந்தால் திருமணம் செய்துகொள்ள வரன்கள் கியூவில் நிற்பார்கள்' என்று அம்மாவைச் சமாதானம் செய்து பயிற்சியில் சேர்ந்தேன்.

"12 -ஆம் வயதில் பயிற்சியைத் தொடங்கினாலும் 15-ஆம் வயதில் துருக்கியில் நடந்த ஜுனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் "ஃப்ளைவெயிட்' பிரிவில் தங்கப் பதக்கம் வென்றேன். இந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஸ்ட்ராண்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றேன்.

சமீபத்தில் துருக்கி இஸ்தான்புல்லில் நடந்த உலக குத்துச் சண்டை போட்டியில் உலக சாப்பியங்களான கசகஸ்தானைச் சேர்ந்த ûஸனா செகார்பேகோவாவையும், தாய்லாந்தைச் சேர்ந்த ஜிட்போங் ஜூடாமûஸயும் வீழ்த்தினேன். இம்முறை உலக சாம்பியனான மேரி கோம் கலந்து கொள்ளவில்லை.

இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம் கொண்டு செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் களத்தில் இறங்கி, வெற்றியும் பெற்றேன். அடுத்து பாரீசில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு பதக்கம் பெறுவதே லட்சியம்.

குத்துச் சண்டையில் உடல் எடையை ஒரே சீராக வைத்திருக்க வேண்டும். அப்பாதான் எனது வெற்றிக்கு முக்கியக் காரணம். எனது பயிற்சியாளர் ராவ் குத்துச் சண்டையில் பல யுக்திகளையும் லாவகங்களையும் சொல்லிக் கொடுத்து தைரியம் கொடுத்தார்.

காமன்வெல்த் போட்டிகளிலும் பதக்கம் பெற வேண்டும். அந்த வெற்றி பாரீஸ் ஒலிம்பிக்ஸிக்கு ஏணியாக அமையும். அதனால் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டுவருகிறேன்.

உலக சாம்பியனாக ஆறுமுறை இருந்திருக்கும் மேரி கோமும் வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தார். மேரி கோம்தான் எனக்கு ரோல் மாடல். அவரது வளர்ச்சியைப் பார்த்து ரசித்து வளர்ந்தவள் நான்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தேர்வின்போது, "குத்துச் சண்டை நடத்தி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவரை டோக்கியோ ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ளட்டும்' என்று சொன்னேன். அதன் அடிப்படையில் மேரி கோமுக்கும் எனக்கும் குத்துச்சண்டை ஏற்பாடு செய்யப்பட்டது. மேரி கோமிக்கு என் மேல் படு கோபம். இருந்தாலும், மேரி கோம் வாழ்த்துச் செய்தியைத் தாமதமாக அனுப்பி, பிறகு நேரில் சந்தித்து வாழ்த்து சொன்னதில் எனக்குப் புத்துணர்வு கிடைத்துள்ளது. ரோல் மாடலின் வாழ்த்துச் செய்தி இல்லாமல் எந்த வெற்றியும் பூரணத்துவம் பெறாது'' என்கிறார் நிகத் ஸரீன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com