சிரி... சிரி...

""சினிமா தியேட்டர் கவுன்ட்டர்ல ஏன் இஞ்சி மிடடாய் தர்றாங்க?''""கதையை ஜீரணிக்கத்தான்''
சிரி... சிரி...

""சினிமா தியேட்டர் கவுன்ட்டர்ல ஏன் இஞ்சி மிடடாய் தர்றாங்க?''
""கதையை ஜீரணிக்கத்தான்''

-எஸ்.வேல் அரவிந்த்,
திண்டுக்கல்.

""சார்.. என்கிட்ட  ரெண்டு வரியில ஒரு கதை இருக்கு?''
""என்கிட்ட  கொடுங்க.. 200  எபிசோட்  டி.வி. சீரியல் எடுத்துடுறேன்''.

-பி.பாலாஜி கணேஷ்,
சிதம்பரம்.

""மகளிர் அணித் தலைவியை காதலிச்சது தப்பாப் போச்சு''
""ஏன்?''
""கூட்டமா காதலிக்க பீச்சுக்கு வர்றாங்க!''

-ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்

""சார்.. உங்க ஆபிசில் பாம்பு வந்ததுன்னு சொன்னீங்களே.. பிறகு என்னாச்சு?''
""அதுவும் எங்க கூட சேர்ந்து தூங்கிருச்சி''

-ஆர்.ஜெயலட்சுமி,
திருநெல்வேலி.


""ராப்பிச்சை திட்டிட்டு போறானே? ஏன்?''
""பிரியாணி- ஷவர்மா போட்டதுக்குதான்''
 

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

""ஏம்பா.. இந்தக் கிளியின் மூக்கை கட்டி வச்சி இருக்கே..?''
""இது மோசமான கிளிங்க.. வர்ற கஸ்டமர்கிட்ட "இந்த ஆள் கப்ஸா விடறான்னு' சொல்லுது. அதனாலே சீட்டு எடுக்க மட்டும் வாய்க்கட்டை அவிழ்த்து விடுவேன்''.

- வண்ணை கணேசன்,
சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com