சிரி...சிரி...
By DIN | Published On : 13th March 2022 06:00 AM | Last Updated : 13th March 2022 06:00 AM | அ+அ அ- |

""உங்க மனைவி சொந்தமா?
பிறத்தியா சார்?''
""கல்யாணத்துக்கு முந்தியா?
பிற்பாடா?''
""தோசை என்னப்பா ஸ்டார் டிசைன்ல இருக்கு?''
""இது ஸ்டார் ஹோட்டல் தோசை சார்''
""எதுக்கு கையைக் கட்டிக்கிட்டே போறீங்க?''
""ஒரு வீட்டுக்கு விருந்துக்குப் போறவங்க, கையை வீசிக்கிட்டு போகக் கூடாதுன்னு எங்க தாத்தா சொல்லிக் கொடுத்திருக்காங்க!''
""அவர் என்ன மனைவியோட கையை கோர்த்தபடியே பாங்க் உள்ளே போறார்?''
""ரெண்டு பேர் பேர்லேயும் ஜாயிண்ட் அக்கவுண்ட் ஆரம்பிக்கப் போறாராம்!''
-வி. ரேவதி,
தஞ்சை.
""மாறு வேடத்தில் நகர் வலம் போவதை மன்னர் ஏன் நிறுத்திவிட்டார்?''
""தெரு நாய்கள் துரத்துதாம்''
"" நல்லா இருன்னு இவர் வாழ்த்தினா, அதில் உனக்கு என்ன சிரமம்?''
"" நீயாச்சும் நல்லா இருன்னு இல்லே... வாழ்த்துறார்?''
- ஏ. நாகராஜன்,
பம்மல்.