பேல்பூரி

மன்னிப்பு என்பது மிகச் சாதாரண வார்த்தைதான்!
பேல்பூரி

கண்டது

(கிருஷ்ணகிரி - குப்பம் நெடுஞ்சாலையில் உள்ளஓர் உணவகத்தின் பெயர்)

ஈரோடு சின்ன வெங்காயம் தாபா

பி. கோபி,
கிருஷ்ணகிரி- 1

(சுவாமிமலை தேரடி சந்நிதியில் உள்ள குளிர்பான கடையின் பெயர் )

நூலாசிரியர் பழமுதிர்சோலை

கீதா முருகானந்தம்,
கும்பகோணம்.

தென்காசி - ஆய்க்குடி - சுரண்டை சாலையில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்

கம்பிளி

-கு.அருணாசலம்,
தென்காசி.

கேட்டது


(சிதம்பரம் ஆசிரியர் நகரில் ஒரு வீட்டில்)

""உங்க ரெண்டு பேருக்கும் ஒன்னுமே தெரியல. எதைச் சாப்பிட்டாலும் ஃபஸ்ட் வாய் மட்டும் தான் அதோட டேஸ்ட் தெரியும். அதுக்கப்புறம்தெரியாது''

""மம்மி... அப்படின்னா டாடிக்கு எடுத்து வச்ச குலோப் ஜாமுன்ல ஒன்னு மட்டும் குடுத்தா போதும்போல... மீதி இருக்கறத எனக்கு குடுத்துடு''

ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்-1.

(பறக்கை பஸ் நிறுத்தத்தில் இருவர்)

"" மாப்ளே, ஸ்கூல் பேக்கை தூக்கிட்டு ஸ்கூல் பையன் மாதிரி கிளம்பி எங்கே போற?''

""அதையேன் கேட்குற மச்சான்... நான் பெத்து வெச்சிருக்கேனே உங்க மருமக புள்ள, அவன் லஞ்ச் பேக், ஸ்நாக்ஸ் பேக் ரெண்டையும் மறக்காம எடுத்திட்டு இந்த புத்தக பேக்கை மட்டும் வச்சிட்டு போயிட்டான். அதை ஸ்கூலில் கொண்டு போய் கொடுக்கப் போறேன்''

சு. நாகராஜன்,
பறக்கை.

யோசிக்கிறாங்கப்பா!

மன்னிப்பு என்பது மிகச் சாதாரண வார்த்தைதான்!
நாம் ஒருவரிடம் அதை எதிர்பார்த்து நிற்காதவரை.

-மருத.வடுகநாதன்,
வேதாரண்யம்.

மைக்ரோ கதை

வீட்டுக்கு வந்து ஹாலில் உட்கார்ந்திருக்கும் சேகரனை, மூக்குக் கண்ணாடியை தூக்கிப் பிடித்தபடி பார்த்த பேராசிரியர் ஜகன், ""யாருங்க தம்பி... என்ன வேணும் உங்களுக்கு?''என்று கேட்டார்.
""ஐயா .... நான், உங்க மாணவன்சேகரன்''
""சரியா நினைவில்ல. வயசு எழுபத்தைந்துஆகுதுல்ல'' என்றார் ஜகன்.
""உங்களாலத்தான், எங்களுக்குப் புத்தகம் படிக்கற பழக்கமே வந்துச்சு'' என்றான் சேகரன்.
அங்கே நின்று கொண்டிருந்த பேராசிரியரின் மனைவி, ""என்ன... நீங்களும் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா? அணிந்துரை வேணுமா? இவருடைய பென்ஷன் எல்லாம் "புத்தகம்' எழுதவே போகுது. ஆனா, உருப்படியா ஒண்ணும் வித்தபாடில்ல. இதுல நீங்க வேற...'' என்று சலித்துக் கொண்டார்.
""மகளுக்கு காது குத்து வச்சிருக்கேம்மா'' என்றான் சேகரன்.
""வயசான காலத்துல, நாங்க எங்கயும்
வெளிய போறதில்ல தம்பி'' என்றார் பேராசிரியர்.
""ஐயாவோட புத்தகத்தைத் தாம்பூலமாத் தரலாம்னு இருக்கேன். ஐநூறு புத்தகம் வேணும்'' என்ற சேகரன், அதற்கான விலையாக முப்பதாயிரம் ரூபாயை எடுத்து பேராசிரியரிடம் கொடுத்தான்.

பூபதி பெரியசாமி,
புதுச்சேரி-9.

எஸ்எம்எஸ்

ஒரு முறை தோற்றுவிட்டால்,
அதற்கு நீங்கள் வேறு ஒரு நபரைக் காரணமாகச் சொல்லலாம்.
ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால்,
அதற்கு நீங்கள் மட்டுமே காரணம்.

சுந்தரி காந்தி,
சென்னை- 56.


அப்படீங்களா!


மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குப் பயன்படக் கூடிய சக்கர நாற்காலிகளைப் பார்த்திருப்பீர்கள். கலிபோர்னியாவைச் சேர்ந்த "வில்' என்ற நிறுவனம் தயாரித்துள்ள மின்சார சக்கர நாற்காலி மிகவும் வித்தியாசமானது. 27 கிலோ எடையுள்ள இந்த சக்கர நாற்காலியை காரின் டிக்கிக்குள் மடித்து வைத்துவிட முடியும். இந்த மின்சார சக்கர நாற்காலி மணிக்கு 4 மைல் வேகத்தில் செல்லக் கூடியது. ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் 12 மைல்கள் தூரம் வரை செல்லும்.

இதற்கென உருவாக்கப்பட்டுள்ள செல்லிடபேசி செயலி மூலம் இந்த சக்கரநாற்காலியை இயக்கலாம். இதில் உள்ள பேட்டரியைத் தேவை ஏற்பட்டால் மாற்றிக் கொள்ள முடியும்.

அதுமட்டுமல்ல, பயன்படுத்துபவரின் தேவைக்கு ஏற்ப இந்த மின்சார சக்கரநாற்காலியை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com