ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: புகைப்பிடித்தல்... உடல்நல பாதிப்புகள்!

43 வயதாகும் என் மகன், விவாகரத்து வாங்கிய பிறகு, புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டான். எந்நேரமும் வீட்டில் சண்டைதான்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: புகைப்பிடித்தல்... உடல்நல பாதிப்புகள்!

43 வயதாகும் என் மகன், விவாகரத்து வாங்கிய பிறகு, புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டான். எந்நேரமும் வீட்டில் சண்டைதான். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் புகைப்பழக்கத்தை விட மறுக்கிறான். புகைப்பழக்கத்தால் ஏற்படும் ஆபத்துகள் எவை? அம்மாவாகிய நான், எப்படி அவன் ஆரோக்கியத்தைக் காப்பாற்றுவது?

-ராஜலட்சுமி, சென்னை.

நுரையீரல் புற்றுநோய், விஷவாயுவான கார்பன் மானாக்ûஸடு ரத்தத்துடன் கலத்தல், உறுப்புகளில் காட்மியம் தங்குதல்முதலிய கேடுகள் புகைப்பிடிப்பவருக்கு விரைவில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் பெரிய தமனிகளின் சுவர் தடித்து ரத்தக் குழாய்களின் உட்பக்கம் குறுகி ரத்த ஓட்டம் தடைப்பட்டு இருதய நோயும் ஏற்படலாம். புகைப்பிடிப்பவர்களின் இரத்தத்திலும் உறுப்புகளிலும் வழக்கமாக இருக்க வேண்டிய அளவை விட வைட்டமின் "சி' குறைவாக இருப்பதால், இந்த நெடுநாளைய வைட்டமின் குறைவினால் ரத்தத்தில் கொலஸ்டிராலும், ஏனைய சில கொழுப்புப் பொருள்களும் (லிபிட்ஸ்)அதிகரித்துவிடுகின்றன. இதனால் சில பெரிய ரத்த நாளங்களின் சுவர்கள் தடித்து குழாய்களின் விட்டம் குறுகும் என்பது பல காலமாக அறிந்த உண்மை.

ரத்தக் குழாய் குறுகி இருதயத்திற்கு ரத்தம் குறைவாகச் செல்லும் ஐநஇஏஅஉஙஐஇ ஏஉஅதப ஈஐநஉஅநஉ என்னும் நோய் வைட்டமின் "சி' யை ஒருவர் தகுந்த அளவு உட்கொண்டால், அவருக்கு ஏற்படுவதில்லை. நாள்தோறும் நாம் அதிக அளவு வைட்டமின் "சி' உட்கொண்டால்ரத்தம் சிறிது கட்டிப் போய் ஏற்படும் ஒரு நோயும் ஏற்படாது. இந்த வைட்டமின் தினம் ஒரு கிராம் உடலில் சேர்ந்தால், ரத்தம் கட்டி ஏற்படும் டீப் வெய்ன் த்ரோம்போசிஸ் ஏற்படாமல் தடுக்கலாம்.

ஜலதோஷம், புற்றுநோய், சர்க்கரை வியாதி, சில ரத்த சோகைகள், தோல் வியாதிகள், காட்மியம் உறுப்புகளில் தங்காமல் சரி செய்வதையும், நாம் தினமும் இரண்டு முதல் மூன்று கிராம் வைட்டமின் "சி' உட்கொண்டால் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

அதனால் உங்களுடைய மகன் இந்த வைட்டமின் சத்து நிறைந்த காய்கறிகளையோ, பழங்களையோ நாள்தோறும் சாப்பிட வேண்டும். புகைப்பிடிக்காமல் இருப்பதுதான் மிக நல்லது. மனதைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், அதிகமாக பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்களை உட்கொள்ள வேண்டும். எளிய கீரையான முருங்கை இலையில், காலிஃப்ளவர் அல்லது முட்டைக் கோûஸவிட அதிக அளவு வைட்டமின் "சி' உண்டு. கொய்யாப்பழத்தில் ஆரஞ்சுப் பழம், தக்காளியை விட அதிக அளவு வைட்டமின் "சி' இருக்கிறது. தவிர, நெல்லிக்கனியிலும் மிக அதிக அளவில் இந்த வைட்டமின் இருக்கிறது. அதனால்தான் ஆயுர்வேதத்தில் இந்த நெல்லிக்கனிக்கு மிகச் சிறந்த இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. காரணம் தெரிந்தோ தெரியாமலோ நம் முன்னோர்கள் இவற்றை எல்லாம் உட்கொண்டு செல்வத்துள் செல்வமான நோயற்ற வாழ்வுடனும் ஆரோக்கியத்துடனும் திகழ்ந்தார்கள் என்பது கூறாமலேயே விளங்கும்.

மனதளவில் அவருக்கு ஏற்பட்டுள்ள கோப- தாபத்தை பெற்றோராகிய உங்கள் மூலம் தீர்க்க உங்கள் மகன் முயல்கிறார். மனதை அமைதியுறச் செய்யும் தரமான மூலிகை நெய் மருந்துகள் ஆயுர்வேதத்தில் நிறைய உள்ளன. அவை தங்களுடைய மகனுக்குப் பெரிதும் நல்லதையே செய்து உடல் - மன ஆரோக்கியப் ப ôதுகாப்பை ஏற்படுத்தித் தரும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com