ரசிகர்களின் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்

குமார், 2021-ஆம் ஆண்டு அக். 29-இல் மாரடைப்பால் இறந்தார். கன்னட திரையுலகம் மட்டுமல்ல; தென்னிந்தியாவே கண்ணீர் சிந்தியது.
ரசிகர்களின் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்


குமார், 2021-ஆம் ஆண்டு அக். 29-இல் மாரடைப்பால் இறந்தார். கன்னட திரையுலகம் மட்டுமல்ல; தென்னிந்தியாவே கண்ணீர் சிந்தியது. கர்நாடக மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு, அவருக்கு மரியாதை செலுத்தியது. அவரின் தந்தை ராஜ்குமார் சமாதிக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருக்கும் புனித்தின் நினைவிடம் தினம்தோறும் ரசிகர்களால் நிரம்பி வழிகிறது.

" எங்களின் கோயில்' என ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு ஒரு நடிகர் என்ன செய்திருக்க முடியும்.

புனித் ராஜ்குமார் மிகப் பிரபலமாக இருந்த கன்னட நடிகர் டாக்டர் ராஜ்குமார் - பர்வதம்மா இணையருக்கு 5-ஆவது குழந்தையாகப் பிறந்தவர். ஆச்சரியம் என்னவென்றால் அவர் சென்னையில் பிறந்தவர். அதன் பிறகு மைசூருக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.

இளமையில் குழந்தை நட்சத்திரமாகத் தனது தந்தையுடன் நடித்திருக்கிறார் புனித். திரைப் பயணத்தில் மத்திய, மாநில அரசின் விருதுகள் முக்கியமானவை.

2002-இல் வெளியான "அப்பு' என்ற படம் அவரை உச்சாணி கொம்புக்கு அழைத்துச் சென்றது. அந்தப் படத்தின் பெயராலே "அப்பு' என்று செல்லமாக கன்னட மக்களால் அழைக்கப்படுகிறார்.

கர்நாடக பால் கூட்டுறவு அமைப்பான "நந்தினி'-யின் விளம்பரத் தூதராக எந்தவித சன்மானமும் பெறாமல் இத்தனை ஆண்டுகளாக தன்னுடைய தந்தையைப் போலவே பணியாற்றிக் கொடுத்துள்ளார். இதனால், பால் விற்பனை அதிகரித்தற்கு இவரது பங்களிப்பும் காரணம் என பால் உற்பத்தியாளர்கள் அவருக்கு நன்றி சொல்கிறார்கள்.

கன்னடத் திரையுலகில் அதிக ஊதியம் பெறுபவர்கள் பட்டியலில் புனித் இருந்தார். வெளியே சொல்லாமலே புனித் செய்த நற்பணிகள் அவரது மறைவுக்குப் பின்னரே, வெளிச்சத்திற்கு வந்தன.

பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் போக்குவரத்து கழகம், மாநிலத் தேர்தல் ஆணையம், பெஸ்காம் எனப்படும் மின் துறை, கல்வித் துறை.. என அவர் தன்னுடைய புகழ் மூலமாக அடையாளப்படுத்திய பொது சேவைகள் ஏராளம்.

26 ஆதரவற்றோர் இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், 19 பசு காப்பகங்கள், கன்னட மீடியம் பள்ளிகள், ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் என புனித் நன்கொடை வழங்கும் பட்டியல் மிகப் பெரியது.

வெள்ளம் போன்ற பேரிடர்கள் வந்தபோது விரைந்து சென்று நீட்டப்படும் ஆதரவுக் கரங்களில் புனித்தும் இருப்பார். கரோனா தொற்று பொது முடக்கக் காலங்களில், தன்னுடைய பங்களிப்பாக மாநில அரசுக்கு ரூ. 50 லட்சம் நன்கொடை வழங்கினார்.

தன்னுடை தந்தை, தாயைப் போல் தன்னுடைய கண்களையும் தானமாக வழங்க ஒப்புக் கொண்டிருந்தார் புனித். இத்தனைக்கு பிறகும் அவரது எளிமையான அணுகுமுறையும் கபடமற்ற சிரிப்பும் ரசிகர்கள் மத்தியில் இன்னும் அவரது நினைவுகளை மலரச் செய்துக் கொண்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com