முகம் மாறும் தெலுங்கு சினிமா!

இப்போதைய சூழலில் டோலிவுட் சினிமாதான் இந்திய சினிமாவில் ஆரோக்கியமாக இருக்கிறது என்கிறார்கள்.
முகம் மாறும் தெலுங்கு சினிமா!


இப்போதைய சூழலில் டோலிவுட் சினிமாதான் இந்திய சினிமாவில் ஆரோக்கியமாக இருக்கிறது என்கிறார்கள்.

கடந்த பத்து வருடங்களில் அத்தனை மாற்றங்கள். பார்த்தாலே பனை மரம் பற்றிக் கொள்வது, அதி வேகமாக வரும் ரயிலை அசால்டாக நிறுத்துவது, ஒரே நேரத்தில் பல பேரை அடித்து துவம்சம் செய்து சிதைப்பது, பாடல் காட்சிகளுக்காக பெயர் தெரியாத நாடுகளுக்கு போய் நடனமாடுவது, பக்கம் பக்கமாக பஞ்ச் வசனம் பேசுவது ஆகியவைதான் தெலுங்கு சினிமா என்றிருந்தது. அதற்கான முகம் இப்போது!

மாறத் தொடங்கி இன்று  நல்ல நல்ல திரைக்கதைகளை கொடுத்து தன்னை வேறு மாதிரி வடிவமைத்துக் கொள்கிறது டோலிவுட் சினிமா. 

"பாகுபலி' போன்ற படங்கள் ஒரு பக்கம், "ஜதிரத்னலு' போன்ற படங்கள் ஒரு பக்கம் என பக்காவாக பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆக்ஷன் ஹீரோவாக மாறி விட்டாலே டோலிவுட்டில் முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் இணைந்து விடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது அப்படியில்லை. "ரங்கஸ்தலம்' டோலிவுட் சினிமாவின் ட்ரென்ட் செட்டர் என்றே சொல்லலாம்." ரங்கஸ்தலம்' பெரிய வெற்றியை அடைந்தது." ரஸ்கஸ்தலம்' படத்துக்கு உத்வேகம் தந்தது "பருத்தி வீரன்'தான் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் அதன் இயக்குநர் சுகுமார். அதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் "புஷ்பா' படத்தில் வித்தியாசம் காட்டியிருந்தார். 

அதே போல வெங்கடேஷ் "அசுரன்' போன்ற கிளாஸிக் படத்தை ரீமேக் செய்ய நினைப்பது சாதாரணமாக எடுத்த முடிவாக இருக்காது. வெங்கடேஷ் எப்படி இந்த மாற்றத்துக்கு பொருந்துவார் என்று கேள்விக்கு பதிலாய், படு மாஸாக வெளியானது" நாரப்பா'. எல்லோரும் மாஸ் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நாம் வித்தியமாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ராணா ஒரு பக்கம் சில பரிசோதனை முயற்சிகளில் இறங்கி பார்க்கிறார்.

நானி படத்துக்கு படம் மாற்றங்களை நிகழ்த்தி வருகிறார். "ஷியாம் சிங்கராய்' படத்தில் மூன்று வேடங்களில் கலக்கியிருந்தார். வரலாற்றுப் பின்னணியில் வரும் நானி இன்னும் சிறப்பு. 

ரவி தேஜாவும் இந்த வகை படத்துக்கு வந்து விட்டார். வழக்கமாக ரவி தேஜா படமென்றால் மாஸ்,  ஆக்ஷன், காமெடி இவை மூன்றும்தான்.  "டைகர் நாகேஷ்வர ராவ்'. 1970-களில் ஸ்டூவர்ட்புரம் பகுதியில் வாழ்ந்த ராபின்ஹுடான ராகேஸ்வரராவ் என்பவரின் பயோபிக்தான் இது. இப்படி தெலுங்கு சினிமாவின் முகம் மாறி வருகிறது.

இந்திய சினிமா என்றால் பாலிவுட்தான் என்ற எண்ணத்தை மாற்ற "ஆர் ஆர் ஆர்', "புஷ்பா' பட விழாக்களே சாட்சி.  இது தெலுங்கு சினிமா அல்ல,  இந்திய சினிமா. ஹிந்தி படம் மட்டும் இந்திய சினிமா கிடையாது. நாங்களும் இருக்கிறோம் என்பது உணர்த்துகிறார்கள் டோலிவுட் நடிகர்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com