ஒரே கதையில் உலகப் புகழ் பெற்றவர்!

அமெரிக்காவின் ஷெர்லி ஜாக்ஸன் என்ற பெண் எழுத்தாளர், 1948-ஆம் ஆண்டில் ஒரே ஒரு கதை எழுதினார்.  ஆனால்,  அதன் மூலமே அவர்  உலகப் புகழ் பெற்றார் என்றால் ஆச்சரியம்தானே!
ஒரே கதையில் உலகப் புகழ் பெற்றவர்!

அமெரிக்காவின் ஷெர்லி ஜாக்ஸன் என்ற பெண் எழுத்தாளர், 1948-ஆம் ஆண்டில் ஒரே ஒரு கதை எழுதினார். ஆனால், அதன் மூலமே அவர் உலகப் புகழ் பெற்றார் என்றால்ஆச்சரியம்தானே!

அந்த கதை:

அமைதியான கிராமத்தில், ஒரு சாதாரணமான நாளில், ஓர் சாதாரண நிகழ்ச்சி நடக்கிறது.

அன்றுதான் அந்தக் கிராமத்தின் புராதனமான வழக்கப்படி " வருடாந்திர லாட்டரி' நடைபெற வேண்டும்.

அதிகாலையே கிராம மக்கள் நிறைய பேர் கூட்டமாகக் கூடி விட்டார்கள். லாட்டரி யாருக்கு விழப் போகிறதோ என்று பயங்கர விவாதம் நடைபெற்று கொண்டிருந்தது.

இந்த வழக்கம் இன்னும் தொடர வேண்டுமா ?

என்று சிலர் சந்தேகம் எழுப்பினர்.

""சும்மா இரு! காலம்காலமாக நடக்கிற இது விட்டுடுற பழக்கமா?''- என்று சிலர் அதட்ட, எதிர்ப்பு அடங்கியது.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பிரதிநிதி வந்து, எதிரில் வைத்திருந்த ஒரு கருப்புப் பெட்டியில் இருந்து ஒரு சீட்டை எடுக்க வேண்டும். உடனடியாகப் பிரிக்கவும் கூடாது. அதை பிரிக்காமல் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நடுவர் நியமிக்கப்படுகிறார்.

எல்லோரும் சீட்டை எடுத்தவுடன், அவரவர் சீட்டைபிரித்துப் பார்க்கின்றனர். நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

ஒரு சீட்டில் மட்டும் ஒரு கருப்புப் புள்ளி இருக்கிறது. அந்தச் சீட்டு இந்த வருஷம் ஹட்ஸன் என்ற பெண்ணுக்கு விழுகிறது.

""சீக்கிரம் இழுத்து வாருங்கள்''- இப்படிபலமாகச் சத்தம் போடுகிறார் கிராமத்துப் பெரியவர்.

நடுவே ஒரு கற்களின் குவியல்.

ஆளுக்கு ஒரு கல்லைப் பொறுக்கிக் கொள்கிறார்கள்.

சீட்டு விழுந்த அபாக்கியவாதி பெண்மணி ""இது அநியாயம்'' என்று கதறி அழுகிறாள். கிராமத்துக்கு மக்கள் அவள் மீது கற்களை எறிந்து, அவளைக் கொல்கிறார்கள்!

இதுதான் கதை.

""தி லாட்டரி'' என்பதே அந்தக் கதையின் தலைப்பு.

கதை வெளியானபோது, நியூயார்க் பத்திரிகைகள் பலமாக கண்டனம் செய்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com