மூன்று சர்ச்சைகள்.... மூன்று பதில்கள்...

திரை நட்சத்திரங்களைச் சுற்றி பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. குறிப்பாக,  நடிகைகளைச் சுற்றி அவ்வப்போது எழும் சர்ச்சைகள் மீடியாக்களுக்கு செய்திகள் ஏராளம்.
மூன்று சர்ச்சைகள்.... மூன்று பதில்கள்...

திரை நட்சத்திரங்களைச் சுற்றி பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. குறிப்பாக, நடிகைகளைச் சுற்றி அவ்வப்போது எழும் சர்ச்சைகள் மீடியாக்களுக்கு செய்திகள் ஏராளம். அந்த வகையில் இந்திய அளவில் எழுந்த மூன்று சர்ச்சைகளும் அவற்றுக்கு அந்த நடிகைகள் அளித்துள்ள பதில்கள் இதோ?

திரைத்துறை மிகவும் மோசனமாது கங்கனாவின் அதிரடி ட்வீட்

கடந்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்கத் தேர்தல் தொடர்பாக, சில விடியோ பதிவுகளைப் பதிவிட்டதோடு, மம்தா பானர்ஜியை பிரதமர் நரேந்திர மோடி அடக்க வேண்டும் என்றும், மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் பாஜக வெற்றி பெற்ற அஸ்ஸாம், புதுச்சேரியில் எந்தவித வன்முறையும் நடக்கவில்லை. ஆனால் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டு வங்காளம் பற்றி எரிகிறது என்றும் தொடர்ச்சியாகப் பதிவுகளை வெளியிட்டிருந்தார். நேரு, இந்திரா காந்தியையும் இதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கங்கனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுட்டுரையில் ஏராளமானோர் பதிவிட்டிருந்தனர்.

இதுகுறித்து சுட்டுரை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ""மீண்டும் மீண்டும் சுட்டுரை விதிகளை மீறி செயல்பட்டதால் கங்கனாவின் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. எங்களது நடத்தை கொள்கையின் படி ஒருவரைத் துன்புறுத்தும் வகையில் பதிவிடக் கூடாது''” என்று குறிப்பிடப்பட்டிருந்தார்.

இதற்கு கங்கனா, "ட்விட்டர் நிர்வாகம் எனது கணக்கை முடக்கியதன் மூலம் அவர்கள் அமெரிக்கர்கள் என்ற என் கருத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் மற்றவர்களை அடிமைப்படுத்த உரிமை உண்டு என்று நினைக்கின்றனர். அவர்கள் நாம் என்ன பேச வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று சொல்ல விரும்புகின்றனர். எனது கருத்தை வேறு தளங்கள் மூலமும், சினிமா மூலமும் கொண்டு செல்வேன். நாட்டில் மக்கள் எங்கு துன்புறுத்தப்படுகிறார்களோ அவர்களுக்காக எனது இதயம் துடிக்கும்" என்றும் பேட்டியளித்திருந்தார்.

இதையடுத்து இன்ஸ்டாகிராமில் இயங்கிவந்தார். கடந்த 8 மாதங்களாக முடக்கப்பட்டிருந்த கங்கனாவின் சுட்டுரை கணக்கு தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து பழையபடி மீண்டும் தனது சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட ஆரம்பித்துள்ளார்.

தற்போது "திரைப்படத் துறை குறித்து ஒரு ட்வீட்டைத் தட்டிவிட்டுள்ளார். அதில், "திரைப்படத் துறை மிகவும் மோசமானது, முரட்டுத்தனமானது. அவர்கள் செய்வது அவர்களின் கீழ்த்தரமான தரத்தையும், அவர்கள் வாழும் கீழ்த்தரமான வாழ்க்கையையும் அம்பலப்படுத்துகிறது" என்று பதிவிட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

புகைப்பட விவகாரம் அனுஷ்கா சர்மாவின் கண்டனம்

70 ஆண்டுகள் பழைமை வாய்ந்த, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பூமா நிறுவனம் விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள், ஆடைகள் உள்ளிட்டவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த 2020 -ஆம் ஆண்டு பூமா ஆடை அணிந்திருந்த புகைப்படம் ஒன்றை பாலிவுட் நடிகையும் , விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்தப் புகைப்படத்தை பூமா நிறுவனம் அனுஷ்கா சர்மாவின் அனுமதியின்றி தங்கள் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

இதனிடையே, தனது அனுமதியின்றி புகைப்படங்களை விளம்பரத்துக்காக பயன்படுத்திய பூமா நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், " என் புகைப்படத்தை விளம்பரத்துக்காகப் பயன்படுத்துவதற்கு முன் நீங்கள் என்னிடம் அனுமதி பெற வேண்டும் என்று உங்களுக்கு தெரியும். நான் உங்களின் விளம்பர நோக்கத்துக்கான ஆள் இல்லை. தயவு செய்து அதை நீக்குங்கள்" என்று பதிவிட்டு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

உடல் நலனே முக்கியம் சமந்தா

நடிகை சமந்தா தெலுங்கு, பாலிவுட் படங்களில் பரபரப்பாக இயங்கி வந்தார். திடீரென அவருக்கு "மயோசிடிஸ்' என்ற ஒரு வகை சரும நோய் தொற்றிக் கொண்டது. இதனால் சமந்தாவால் படப்பிடிப்புகளில் சரியாகக் கலந்து கொள்ள முடியவில்லை. சிகிச்சைக்காக தென்கொரியா செல்லப் போவதாகச் செய்திகள் வெளியானது.

உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் உடல் நலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க சமந்தா முடிவு செய்துள்ளார். இதற்காகத் தனது சில படங்களைத் தியாகம் செய்யவும் முடிவு செய்துள்ளார். தான் நடித்து வெளிவந்த "யசோதா' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கூட அவர் பெரிதாகக் கலந்து கொள்ளவில்லை. அதோடு ஹைதராபாத் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். சமந்தா நடித்த வெப்சீரிஸான "தி பேமிலி மேன்' சீசன் 2-க்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அதைத் தொடர்ந்து சில பாலிவுட் படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி இருந்தார்.

தற்போது ஒப்பந்தமான பாலிவுட் படங்களிலிருந்து விலகுவதாகச் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு தெரிவித்திருக்கிறார். இதனால் வேறு நடிகையர்களைத் தேடும் முயற்சியில் அந்தந்த தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உடல் நலம் முழுமையாகக் குணமடையும் வரை படப்பிடிப்பிலிருந்து முழுமையாக ஒதுங்கி இருக்க சமந்தா முடிவு செய்திருக்கிறார். அதே சமயம் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்து வரும் "குஷி' படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார். "குஷி' படத்தின் படப்பிடிப்பு 60 சதவிகிதம் அளவுக்கு முடிந்துவிட்டதாக நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். சமந்தா விரைவில் குணமடைந்து வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com