ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க...

ஆயுர்வேதம்: சளி, கபம் நீக்க சிறந்த மூலிகை மருந்துகள்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க...

என் மகளுக்கு வயது ஆறு. அவளுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருப்பதால், அடிக்கடி ஜலதோஷம், தும்மல், காய்ச்சல், சோர்வு, பசியின்மை.. என்றெல்லாம் ஏற்பட்டு, சுருண்டு படுத்துகொள்கிறாள். பள்ளிக்கு அனுப்பவும் முடியவில்லை. இதனால் எப்போதும் வீட்டில் பிரச்னைதான். நோய் எதிர்ப்புச் சக்திக்கான மருந்து ஏதேனும் ஆயுர்வேதத்தில் உள்ளதா?

-கலையரசி, நங்கநல்லூர், சென்னை.

குழந்தைகளின் உடல், மன திட ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறுவயது முதலே அறுசுவைகளையும் சாப்பிடுவதற்குப் பயிற்சியைத் தர வேண்டும். "நித்யம் ஷட்ரúஸô அப்யாஸ' என்கிறது வேதம். அதாவது தினமும் அறுசுவைகளையும் உண்ண பயிற்சியை எடுக்க வேண்டும் என்பதே அதற்கு அர்த்தம் கூறலாம்.

இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையினால் தலை முதல் மார்புப் பகுதி வரை, சளியை அதிகப்படுத்தி துன்பத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்தச் சுவை நிறைந்த மாவுப் பண்டங்களாகிய இட்லி, தோசை, வடை, ரவையால் தயாரிக்கக் கூடிய உப்புமா, கஞ்சி வகைகள் போன்றவை தவிர்க்கப்பட வேண்டியவை. காலை உணவாக சூடாகப் பருப்புச் சாதத்தில் நெய்விட்டு பிசைந்து, மிளகு, சீரகம், பூண்டு போட்டுத் தயாரித்த தெளிவான ரசம் கலந்து சாப்பிட கொடுக்க, குழந்தையின் பசித் தொல்லை நீங்கி, உடல், மன திடம் வலுவாவதுடன் நோய் எதிர்ப்புச் சக்தியும் கூடும்.

இவை கூடிய பிறகு சிறிது, சிறிதாக இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகளையும் கூட்டலாம். காரம்- கசப்பு- துவர்ப்புச் சுவை மூன்றும் சளியால் ஏற்படும் எந்தக் கிருமிகளையும் அழித்துவிடும் தன்மையைக் கொண்டவை. இந்தச் சுவைகளை அடிப்படையாகக் கொண்டு கீழ்க்காணும் மூலிகைகளைச் சேர்த்து "அபெக்ஸ்' எனும் நிறுவனம் சென்னையில் "இம்யூனிட்' எனும் டானிக் மருந்தைத் தயாரித்து விற்பனை செய்துவருகின்றனர்.

பூண்டு, வேப்பு, துளசி, நெல்லிக்காய், அஸ்வகந்தா, சீந்தில்கொடி, நிலவேம்பு ஆகியவற்றைக் கொண்டு மருந்து தயாரிக்கப்படுகிறது. குழந்தைகளுக்குச் சுமார் ஐந்து மில்லி வீதம் காலை, மதியம், இரவு உணவுக்குப் பிறகு கொடுத்து வரலாம். இந்த மருந்து, மாத்திரையாகவும் விற்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு காலை, மாலை ஒரு மாத்திரை, வெறும் வயிற்றில் சிறிது சூடான தண்ணீருடன் கொடுக்கலாம். பத்து வயதுக்கும் மேற்பட்டவர்களுக்குபத்து மில்லி டானிக்கும், மாத்திரை மாலையில் மட்டும் இரண்டும் சாப்பிடலாம்.

பூண்டு நெய்ப்பும் சூடு உள்ளது. தொண்டை, மேல் வயிறு, குடல் முதலிய இடங்களில் வாயு, கபம் சேராமல் தடுக்கும். நுரையீரலில் அடைந்துக் கிடக்கும் கபத்தை இளக்கி, வெளிக் கொணர்வதிலும் கபத்தின் நாற்றத்தைப் போக்குவதிலும் அங்குள்ள கிருமிகளை அழிப்பதிலும் பூண்டு நிகரற்றது. பூண்டை வேப்பெண்ணெயுடன் காய்ச்சி அள்ளுமாந்தம் முதலிய நுரையீரல் சார்ந்த கப நோய்களில் சிசுக்களுக்கு கொடுப்பது வழக்கம்.

வேப்பு கசப்பான சுவையினால் சளியைக் கரைத்து அதனுள் சேர்ந்திருக்கும் கிருமிகளை நசிக்கச் செய்யும். கீரிப் பூச்சி, ஆசனவாய் அரிப்பைப் போக்கும்.

காரமான சுவையுடைய துளசியின் சேர்க்கையாலும் அதன் சூடான வீரியத்தினாலும் கெட்டியான சளியைக் கரைத்து, மூச்சுக்குழாய், உணவுக் குழாயைச் சுத்தப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நெல்லிக்காய், குடல், குழாய் அடைப்பை நீக்கும். நுரையீரலை வலுப்படுத்தி, இருமல், சளி வராமல் பாதுகாக்கும், சூடான வீரியமுடைய அஸ்வகந்தா, நாடி நரம்புகளை வலுப்படுத்தும் சீந்தில்கொடி, நிலவேம்பு, கசப்பாதைத் தன்மையால் அழுகும் நிலையிலுள்ள மூக்கு, தொண்டை, மார்புச் சளியைக் கரைத்து வெளியேற்றும்.

தொடரும்

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,

டீன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)

செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com