சிரி... சிரி...

மருத்துவம் சிரிப்புடன்: கிளினிக்கில் நகைச்சுவை நிறைந்த சம்பவங்கள்
சிரி... சிரி...

'என்னங்க இது.. கிளினீக்கில் ஆளாளுக்கு அரிசியில் கல் தேடிக்கிட்டு இருங்காங்க..?'

'இந்த கண் டாக்டர் வித்தியாசமான முறையில் கண் டெஸ்ட் பண்ணுவாருன்னு சொன்னேன்ல.. அதான்..'

-பூ.சுப்பிரமணியன், பள்ளிக்கரணை, சென்னை.

'டாக்டர்... காஞ்சிபுரத்துல இருக்கிற உங்களுக்கு எப்படி மெட்ராஸ் ஐ வந்தது..'

'சென்னைதான் விரிவடைஞ்சுட்டே போகுதே.. அதான்...'

-வி.சாரதி டேச்சு, சென்னை.

'நர்ஸ்.. வாழ்க்கையில் நான் ரொம்பவே அடிபட்டவன்...'

'சரி.. சரி அடிபட்டதுபோதும்.. ஓரமாக

நில்லுங்க.. பின்னாடி ஆம்புலன்ஸ் வருது பாரு..'

-அரசமதி, தேனி.

'பேஷன்ட்டு கூட வந்த நீங்க நடக்க முடியாம வர்றீங்க... உங்களுக்கு என்ன பிரச்னை..'

'செருப்பு அறுந்துப் போச்சி டாக்டர்.. அதை சரி பண்ணனும்...'

-பத்மா சாரதி, தஞ்சாவூர்.

'உங்களுக்கு தினமும் கனவு வருதா...? இது சகஜம்தானே..!'

'டாக்டர்.. சீரியல் மாதிரி தொடர் கனவா வருதே..?'

-அ.செந்தில்குமார், சூலூர்.

'உங்க பீஸ் அதிகமா இருக்கு டாக்டர்..'

'சரிங்க... உங்களுக்கு நோய் அதிகமாக இருக்குதுன்னு எப்பவாச்சும் நான் சொல்லி இருக்கேனா..?'

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

'உங்களுக்கு உடம்பு இருக்கிற எல்லா வலியும் இருக்குதுன்னு சொல்றீங்களே.. தொடர்ச்சியா ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்கணும். ஐந்தாயிரம் பீஸ் ஆகும். பராவாயில்லையா?'

'பரவாயில்லை டாக்டர்.. நாலு நாள் கழிச்சு வர்ற அவ பர்த்டேவுக்கு ஐம்பது ஆயிரம் ரூபாய் பட்ஜெட் போட்டு வைச்சிருக்கா.. இது ஓ.கே.தான் டாக்டர்..'

-கோ.வினோத், திருநெல்வேலி.

'தூங்கி எழுந்தவுடன் ஒரு குற்ற உணர்ச்சி வருது டாக்டர்..'

'இனிமே ஆபிஸில் தூங்காதீங்க..?'



'இந்த பேஷண்ட்டுக்கு அடிக்கடி ஏன் மயக்கம் வருது..'

'ஆஸ்பத்திரி பில்லை அடிக்கடி எடுத்து பார்க்கிறார் டாக்டர். அதான்..'

-பர்வீன் யூனுஸ், சென்னை.

'தூக்கத்தில் என் புருஷன் பேசிட்டே இருக்காரு டாக்டர்..'

'பகல் முழுசும் வாய் திறக்காம இருந்தால் இப்படித்தான்மா நடக்கும்...'



'பேஷண்டுகளிடம் முகத்தை மூடிக்கிட்டே டாக்டர் பேசுறாரே.. கரோனா பயமா..?'

'இல்லை. அவரு முகத்தை காட்டுறாருன்னு பல பேரு குறை சொல்றாங்களாம்...'



'நீங்களா வந்தீங்களா?, யாராவது சொல்லி வந்தீங்களா..?'

'நானேதான் வந்தேன்.. ஏன் டாக்டர்...'

'யாராவது சொல்லி வந்தீங்கன்னா.. அவங்களுக்கு கமிஷன் கொடுக்கணும்ல அதான் கேட்டேன்...'



'காது கேக்கலைன்னு சொன்னீங்களே.. ஏன் காதுல ஏதோ அடைச்சி வைச்சிருக்கீங்க..?'

'டாக்டர்.. இது காது கேக்கும் கருவி...'

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com