திரைக்கதிர்

கிகீயின் டான்ஸ் ஸ்டூடியோ திறப்பு விழா: சுஹாசினி சிறப்பம்சம்!
திரைக்கதிர்

பாக்யராஜின் மருமகளான கீர்த்தி (கிகீ) சாந்தனு, புதிதாக டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றைத் திறந்திருக்கிறார். விழாவிற்கு கிகீயின் நட்பு வட்டத்தில் உள்ள நடிகர்கள் பரத், ஜனனி, கலையரசன், சம்யுக்தா, காயத்ரி ரகுராம் எனப் பலரும் வாழ்த்த வந்திருந்தனர்.

கிகீ, தனது மாமியாரான பூர்ணிமா பாக்யராஜிடம், ஸ்டூடியோவை சுஹாசினி திறந்து வைத்தால் சிறப்பாக இருக்கும் எனக் கூற, உடனே சுஹாசினியிடம் இந்த விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்.

சுஹாசினியும் மகிழ்வுடன் வந்திருந்து ஸ்டூடியோவைத் திறந்து வைத்து வாழ்த்தியிருக்கிறார்.

----------------------------------------------------------------------------------------------------

விஜய்யின் "தி கோட்' படத்தின் சாட்டிலைட் உரிமையை 55 கோடிக்குக் கேட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம், அடுத்தடுத்து பல கெடுபிடிகளை விதித்ததாம்.

"படம் ரிலீஸாகி ஒரு மாதத்துக்குள் ஒளிபரப்புவோம்', "நாங்கள் சொல்லும் தேதிக்குள் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும்', "படத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் இருக்கக் கூடாது' என அடுத்தடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் நிபந்தனைகள் விதிக்க, தயாரிப்புத் தரப்பும் ஓகே சொன்னதாம்.

இறுதியாக "சன் டி.வி-க்காக விஜய் இரண்டு மணி நேரம் ஒதுக்கித் தர வேண்டும்' எனச் சொல்லப்பட்டதாம். இது குறித்து விஜய்க்குச் சொல்லப்பட, அவர் கொஞ்சமும் யோசிக்காமல் "நோ' சொல்லிவிட்டாராம். விளைவு, இப்போது "தி கோட்' பட சாட்டிலைட் உரிமை, ஜீ நிறுவனத்துக்குக் கைமாறியிருக்கிறது.

----------------------------------------------------------------------------------------------------

அஜித்தின் "விடாமுயற்சி' படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது புதிராகயிருக்கிறது. திட்டமிட்ட பட்ஜெட்டைக் காட்டிலும் டபுள் மடங்கு செலவுகள் இழுத்துக் கொண்டேபோவதால், "இனியும் எங்களால் முடியாது' எனக் கையை விரிக்கிறதாம் லைகா நிறுவனம்.

மே மாதத்தை ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ஒதுக்கப்போவதாக அஜித் தரப்பில் சொல்லியும், லைகா நிறுவனம் அசைந்து கொடுக்க வில்லையாம். இயக்குநர் மகிழ் திருமேனி, எடுத்த வரைக்குமான படத்தை எடிட் செய்யும் வேலைகளில் தீவிரமாகியிருக்கிறார்.

"ஆதிக் இயக்கும் படத்துக்குப் போய் விட்டால், அடுத்த ஐந்து மாதங்கள் கழித்துத்தான் தேதி' என அடுத்த வெடிகுண்டை வீசியிருக்கிறதாம் அஜித் தரப்பு.

----------------------------------------------------------------------------------------------------


வெற்றிமாறனின் "விடுதலை' படத்தில் கதை நாயகனாக சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து "கொட்டுக்காளி', "கருடன்' என தொடர்ந்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துள்ளார் நடிகர் சூரி. இந்நிலையில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நடித்துள்ள "கருடன்' திரைப்படம் மே 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன், சசிகுமார், சிவகார்த்திகேயன்,விஜய்சேதுபதி ஆகியோர் கலந்துகொண்டு நடிகர் சூரியை வாழ்த்திப் பேசியிருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் "கொட்டுக்காளி' படத்தை "கூழாங்கல்' படத்தின் இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கியிருக்கிறார். சூரி நடித்துள்ள "கொட்டுக்காளி' திரைப்படம் சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்று வருகிறது.

----------------------------------------------------------------------------------------------------

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com