சிரி... சிரி...

'என்னப்பா.. சர்வர் டிப்ஸ் கொடுத்தா வேண்டாமுன்னு சொல்றே..?'
சிரி... சிரி...
Published on
Updated on
1 min read

'என்னப்பா.. சர்வர் டிப்ஸ் கொடுத்தா வேண்டாமுன்னு சொல்றே..?'

'அந்த செல்லாத ரூபாய் நோட்டை தள்ளிவிட நான்தான் கிடைச்சேனா..?'

-அ.செந்தில்குமார், சூலூர்.



'கிச்சனில் இருந்து வெளியே வர்ராரே.. அவர் பரோட்டா மாஸ்டரா, டீ மாஸ்டரா?'

'ரெண்டும் இல்லை. அவர் யோகா மாஸ்டர்.. காசில்லாமல் சாப்பிட்டதற்காக பாத்திரம் கழுவி குடுத்திட்டு வர்றாரு?'

-பர்வீன் யூனுஸ், சென்னை.



'என்னப்பா இது? சாம்பார் வடை கேட்டால், ரச வடை வைக்கிறே?'

'சாரி சார்.. சாம்பார் முடிஞ்சு போச்சு..'




'அந்த ஓட்டல் சுத்த மோசமா?'

'ஆமாம்.. எக்ஸ்டிரா சட்னி, சாம்பார் கேட்டால் மீம்ஸ் போட்டு கலாய்ப்பாங்க?'

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.



'எதுக்குங்க.. மைசூர் பாக்கோடு ரெண்டு ஸ்பூன் சர்க்கரை தர்றீங்க?'

'மைசூர் பாக்கில் ஸ்வீட் குறைஞ்சு போச்சு. அதுக்குதான்..?'




'சட்னி ஏன் இவ்ளோ கெட்டியா இருக்கு?'

'ஒரு வாரமா ப்ரீஜ் ப்ரீசரில் வைத்திருந்தோம் சார்...?'



'உப்புமாவில் உப்பே இல்லை. குப்பையில் கொட்டு..?'

'அப்படியே கொட்டவா? உப்பைப் போட்டு கொட்டவா?'

'ரெண்டையும் சேர்த்து ஒண்ணா சேர்த்து கொட்டு..?'

-பர்வதவர்த்தினி, பம்மல்.



'சர்வர் என்ன இருக்கு..?'

'பேப்பர் ரோஸ்ட், பேப்பர் வெயிட் இருக்கு சார்..'

'அது என்ன பேப்பர் வெயிட்ட?'

' லட்டு சார்...'

- விருதை ராஜா, அல்லம்பட்டி,



'ஏன்டா அரிசி மூட்டையில் இவ்ளோ அரிசி குறைஞ்சிருக்கு?'

'மூட்டைக்கு அடியில் ஓட்டை விழுந்திருக்கும் முதலாளி..'

'அடியில் ஓட்டை விழுந்தா எப்படிடா மூட்டைக்கு மேலே அரிசி குறையும்...?'



'என்னங்க.. இன்னிக்கு வெயில் ஜாஸ்தி..

ஆபிஸூக்கு போக வேண்டாம்...?'

'என்னை நம்பு செல்லம்.. சத்தியமா எனக்கு வத்தல் போடத் தெரியாது...'




'ஏன்டி.. உன் புருஷன் எப்போது சாப்பிட்டாலும் சாப்பாடு நல்லாயிருக்குன்னு புகழ்றாரே..?'

'அவரு சமைத்ததை அவரே எப்படி குறை சொல்வாரு?'

-ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.



'சாம்பார் வாளியை சர்வர் இங்கேயே வச்சிட்டு போறாரே..?'

'ஒரு வேளை டிப்ஸ் அதிகம் எதிர்பார்க்கிறாரா?'




'சின்ன குழந்தைக்கு நான்கு ரோஸ்டா.. என்ன சார் சொல்றீங்க?'

'ஆமாம்.. அவ தோசையோட ஓரத்தை மட்டும் சாப்பிட்டு மீதியை வெச்சிடுவா?'

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.