பேல் பூரி

'உங்க நண்பரிடம் செல்போனில் பேசவே முடியறதில்லையே.. ஏன்..?'
பேல் பூரி
Published on
Updated on
2 min read

கண்டது

(திருச்சி- தஞ்சாவூர் சாலையில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)

'அப்பத்தா சமையல்''

-எம்.சுப்பையா, கோவை.

(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரு ஊர்களின் பெயர்)

'கலசம் இறக்கி குடியிருப்பு', 'சேர்ஊர்''.

(தென்காசி அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)

'தேன் பொத்தை''

-கே.எல்.கந்தரூபி, மாங்காடு, காஞ்சிபுரம் மாவட்டம்.

(தருமபுரி மாவட்டத்துக்கு உள்பட்ட பென்னாகரம் அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)

'திகிலோடு'

-பி.கோபி, கிருஷ்ணகிரி.

கேட்டது

(தஞ்சாவூர் பூங்கா ஒன்றில் இரு நண்பர்கள்...?

'மனைவியோடு சேர்ந்து வாக்கிங் போனீங்க.. இப்போ ஏன் தனியா வர்றீங்க?''

'சேர்ந்து போனா.. ரெண்டு பேருக்குள் சண்டை வந்துடுது சார்... அதான்...'

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

(கோவை பாரதி பூங்காவில் நடைபயிற்சியின்போது இருவர்...)

'உங்க நண்பரிடம் செல்போனில் பேசவே முடியறதில்லையே.. ஏன்..?''

'காலையில் கூப்பிட்டா ஆபிஸில் மேனேஜர் இருக்கிறாரு.. சாயந்திரம் கூப்பிடுன்னு

சொல்வாரு.. சாயந்திரம் கூப்பிட்டா வீட்டில் மனைவி இருக்கிறாரு அப்புறமா கூப்பிடுன்னு சொல்வாரு..?''

-எம்.பி.தினேஷ், கோவை- 25.

(ஈரோடு பேருந்து நிலையத்தில் இரு நண்பர்கள் பேசியது)

'பாருடா.. எவ்வளவு பெரிய காரை ஜி.டி. நாயுடுக்காக அவர் நண்பர் பிரசென்ட் பண்ணி

யிருக்கார்... நீ உன்னோட வண்டியை கொஞ்ச நேரம் தர்ற மாட்டேங்குறே..?''

'வண்டியை தரலாம்டா... பெட்ரோலுக்கும் காசு கேப்பப் பாரு.. அதுக்குதான் வயிறு எரியுது...''

-கி.சரஸ்வதி, ஈரோடு.

யோசிக்கிறாங்கப்பா!

வாழ்க்கை போராட்டம் அல்ல;

நீ புரிந்துகொண்டால் பூந்தோட்டம்.

-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

மைக்ரோ கதை

'என்னப்பா.. போன் செய்தாலும் எடுக்க மாட்டே.. வாட்ஸ் ஆஃப்பில் மெசேஜ் அனுப்புன்னு சொல்லுவே.. இப்போ என்ன வாட்ஸ் ஆஃப் மெசேஜ் பண்ணாலும் பார்க்க மாட்டேங்குறே.. ரிப்ளையும் பண்ண மாட்டேங்குறே? என்ன ஆச்சு'' என்று தனது நண்பர் விஜினுக்கு போன் செய்த ராஜேஷ் கடுமையாக கத்தினார்.

'பொறுடா சொல்றேன்'' என்று விஜின் பலமுறை கூறியவுடன் ராஜேஷ் அமைதியானான். பின்னர், 'ஸ்கூலில் படிச்ச ஸ்டூடன்ஸ், காலேஜில் ஸ்டூடன்ஸ், ஏரியா பசங்கன்னு ஆளுக்கு ரெண்டு, மூணு குரூப்புகள்.

அம்மா வீட்டு சொந்தங்கள், அப்பா வீட்டு சொந்தங்கள், மனைவி வீட்டு சொந்தங்கள்னு ரெண்டு- மூணு குரூப்புகள், ஆபிஸ் ஸ்டாப்ஸ் நாலைந்து குரூப்புகள், பொருள்கள் வாங்கிற கடைக்காரங்கள்னு பத்து குரூப்புகள்... ன்னு நூறு வாட்ஸ் ஆஃப் குரூப்புகள் இருக்கு. வேண்டாமுன்னு வெளியே வந்தாலும் சேர்த்துடறாங்க... ஒபன் பண்ணாவே ஆயிரம் மெசேஜ் வந்து குவியுது.. யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க?'' என்று புலம்பினார் விஜின்.'அட போடா.. எனக்கும் அதே நிலைதான்'' என்றான் ராஜேஷ்.

-தி.பிரவீன்குமார், கே.ஜி.எஃப்.

எஸ்.எம்.எஸ்.

மகிழ்ச்சியைவிட மறதியே

மனிதனுக்கு மன நிம்மதியைத் தருகிறது.

-ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.

அப்படீங்களா!

வாட்ஸ் ஆஃப்பை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுடன் இணைக்கும் புதிய சேவையை மெட்டா நிறுவனம் தொடங்கி உள்ளது. ஒரிரு மாதங்களில் இது அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் அறிமுகமாகிவிடும்.

இதன்படி, வாட்ஸ் ஆஃப்பில் உள்ள 'அக்கவுண்ட்ஸ் சென்டரில்' அவரவர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளைச் சேர்த்துவிட வேண்டும்.

பின்னர் வாட்ஸ் ஆஃப்பில் பதிவேற்றப்படும் அனைத்து தகவல்களும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் வெளியாகும்.

ஒரே தகவலை மூன்று சமூக ஊடகங்களிலும் தனித்தனியாக பகிர வேண்டிய அவசியம் இல்லை. இதேபோல் வாட்ஸ் ஆஃப் கணக்கில் உட்புகுந்தால்போதும், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்களையும் பயன்படுத்திவிடலாம்.

'அக்கவுண்ட்ஸ் சென்டரில்' வாட்ஸ்ஆப்பை இணைப்பது பயனர்களின் முடிவுக்கு உட்பட்டது.

தற்போது 'அக்கவுண்ட்ஸ் சென்டரில்' ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் இணைப்பு நடைமுறையில் உள்ளது. இதில் வாட்ஸ் ஆஃப் செயலியும் இணைக்கப்படுகிறது. இது தினசரி அதிக அளவில் புதிய தகவல்களைப் பதிவிவேற்றம் செய்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.