சிரி... சிரி...

அந்த கண் டாக்டரிடம் ஏன் இப்போ கூட்டமே வர்றதில்லை..?
சிரி... சிரி...
Published on
Updated on
1 min read

'அந்த கண் டாக்டரிடம் ஏன் இப்போ கூட்டமே வர்றதில்லை..?''

'கூட்டம் வர்றதைப் பார்த்து யாரோ கண் வெச்சிட்டாங்களாம்...''



'டாக்டர் பேஷண்டுக்கு என்ன கொடுக்கலாம்..?''

'பேஷண்டுக்கு ஒண்ணும் கொடுக்க வேண்டாம்.. எனக்குதான் பீஸ் கொடுக்கணும்...''

-வி.சாரதி டேச்சு, சென்னை.



'நடுராத்திரியில் எதுக்கு வந்து கதவைத் தட்டுறே..?''

'டாக்டர்.. எனக்கு தூக்கத்தில் நடக்கிற வியாதிங்க.. நீங்க அதைக் குணப்படுத்துற எக்ஸ்பர்ட்டுன்னு கேள்விப்பட்டு வந்திருக்கேன்..''

-ரத்னம் மரகதம், கோயம்புத்தூர்- 15.



'டாக்டர்.. நீங்க கொடுத்த மருந்து ஞாபக மறதியைப் போக்கலீங்க..?''

'நீதான்பா.. ஞாபக மறதிக்கு மருந்து கேட்டே...?''

-க.வை.ராமகிருஷ்ணன், மல்லூர்.



'டாக்டர்.. பத்து வருஷமா வர்றேன்.. நோயில் எந்த முன்னேற்றமும் இல்லையே..?''

'ஏன் இல்லை.. நான் கார், பங்களா வாங்கிட்டேனே..''

வி.வைத்தியநாதன், சென்னை-78.



'உங்களுக்கு கண் பார்வை மங்கலா தெரியுதா?''

'ஆமா டாக்டர்.. எப்படி சொல்றீங்க?''

'டாக்டர் உள்ளே இருக்காரு.. நான் கம்பவுன்ட்டர்.. போய் பாருங்க?''

-அ.செந்தில்குமார், சூலூர்.



'டாக்டர்.. உடம்பு குறைய என்ன செய்யணும்...''

'தினசரி சைக்கிள் ஓட்டுங்க..''

'அப்போ சீக்கிரம் உடம்பு குறைய ஸ்கூட்டி ஓட்டலாமா?''

-நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.



'டாக்டர்.. எனக்கு அடிக்கடி கழுத்து வலி வருது...?''

'மனைவியைத் தலையில் தூக்கிவைச்சிட்டு ஆடினா.. இப்படிதான்...''

-ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.



'உன் குழந்தைக்கு டாக்டரிடம் பெயர் வைக்கச் சொன்னது தப்பா போச்சா? ஏன்...?''

'பெயரை பேப்பரில் எழுதிக் கொடுத்திட்டு, மெடிக்கல் ஷாப்பில் கேட்டு தெரிஞ்சுக்கச் சொல்றாரு..?''

-எம்.பி.தினேஷ், கோவை-25.



'உங்க மனைவிக்கு கண்ணில் என்ன பிரச்னை..''

'மளிகைக் கடையைப் பார்த்தால்கூட அவங்களுக்கு புடவைக் கடை மாதிரி தெரியுது டாக்டர்..''

-தீபிகா சாரதி, சென்னை-5.



'என்ன... நான் ஒரு மாசத்துக்கு எழுதிய சிரப் பத்து நாளில் காலி ஆயிடுச்சா?''

'ஆமாம் டாக்டர்.. ஃப்ளேவர் நல்லா இருந்ததால், வேளைக்கு ரெண்டு மூடி சேர்த்தே குடிச்சிட்டேன்...''



' நினைவு திரும்பியும் ஏன் கோமாவில் இருக்கிற மாதிரி நடக்கிறீங்க..''

'ஆஸ்பத்திரி பில்லுக்கு பயந்துதான்...''

-அ.ரியாஸ், சேலம்.



'ஆபரேஷன் முடிந்து தையல் போடறதுக்கு முந்தி ஒரு தடவை மானிட்டரில் பார்த்துடுவோம்..''

'எல்லாம் சரியா இருக்கான்னா டாக்டர்..''

'இல்லை... கத்தி, கத்திரி, கிளவுஸ்... எதையாவது உள்ளே வச்சிருக்கோமான்னு..''



'ஞாபக மறதி ரொம்ப ஓவரா இருக்கு டாக்டர்...''

'டோக்கனை கொடுக்க மறந்துட்டீங்களா..?''

'அதில்லை டாக்டர்.. அந்த டோக்கனை எடுத்திட்டு, டீக்கடையில் கொடுத்து டீ கேட்டுட்டேன்...''

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
<