'என்னங்க... தேள் கொட்டினா வலிக்குமா?''
'இப்போ ஏன் அதை கேக்குறே...?''
'உங்க காலுக்கு அடியில் தேள் இருக்கே... அதான் கேட்டேன்...''
-எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.
'உன்னை லவ் பண்ணும்போது இருந்த மாதிரியே இப்பவும் இருக்கியே...?''
'ஏங்க?''
'இப்பவும் பார்க், பீச் கூட்டிட்டு போகணும் சொல்றீயே.. அதான்...''
-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.
'என்னங்க... அந்த சீரியல் ரொம்ப மோசம்தான்...''
'என்ன ஆச்சு...''
'வயிற்றுல இருக்கிற குழந்தையும்கூட அழுவுதுன்னா பாருங்களேன்...''
-பர்வீன் யூனுஸ், சென்னை.
'ஏங்க.. உங்க பையன் உங்களை மாதிரியே இருக்கான்..''
'எந்த விஷயத்தில்...?''
'எவ்வளவு திட்டினாலும் கோபம் வரமாட்டேங்குது...''
-நா.நாகராஜன், ஊரப்பாக்கம்.
'என்னடி... உங்க அப்பா விளம்பரப் பிரியர்தான் அதுக்காக இப்படியா?''
'என்னங்க ஆச்சு...''
'அவர் கொடுத்த எல்லா பொருள்களிலும் 'உபயம்- உலகநாதன்'-ன்னே எழுதி வைச்சிருக்காரே..?''
'ஸ்டவ் யார் பற்ற வைக்கிறது யாருன்னு எனக்கும், என் மனைவிக்கும் போட்டி...''
'கடைசியில் யார் ஜெயிச்சது...?''
'பத்த வைக்கிறதில் அவுங்களை யாராவது வெல்ல முடியுமா..?''
-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
'நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன்.. நீ இல்லாம என்னால வாழ முடியாது...''
'என்னங்க சரக்கு போட்டு பேசுறீங்களா?''
'இல்லை.. சரக்கோட பேசிக்கிட்டு இருக்கேன்...''
'என் புருஷனுக்கு ஆயுள் நீடிக்க நான் என்ன விரதம் இருக்கணும்...''
'மௌன விரதம் இருந்தாலே போதும்...''
-நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
'நீங்க பெண்டாட்டியே சுற்றிச் சுற்றி வர்றதா ஒரு பேச்சு இருக்கே...?''
'ஆமா.. அவங்களை நூறு தடவை சுற்றி வந்தால், நாலரை கி.மீ. ஜாகிங் போறதுக்கு ஈடா இருக்குமேன்னுதான்...''
'நான் குடிக்கிறதை விட்டுட்டேன் சரசு...''
'போச்சுடா... காலையிலேயே குடிச்சிட்டு வந்துட்டியா...?''
'ஒரு பாயின்ட்டில்தான் எனக்கும் என் மனைவிக்கும் பிரச்னையே வருது...?''
'எந்த பாயின்ட்டில்...?''
'ஒழுங்காக இருக்கிற ஒரே பிளக்பாயிண்ட்டில் யார் மொபைலுக்கு சார்ஜ் போடறதுன்னுதான்...''
'என்னோட கல்யாணத்துக்கு முந்தி அந்தாளை ரொம்ப நம்பினேன். ஆனா சரியான பித்தலாட்ட பேர்வழின்னு பிறகுதான் தெரிஞ்சது...?''
'யார் அவர்...?''
'எனக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வச்ச தரகர்தான்...''
-வி.ரேவதி, தஞ்சாவூர்.