19 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை மின்வாரியத்தில் ரூ. 2,000 கோடி டெண்டா்கள் நிறுத்திவைப்பு!அமெரிக்காவின் புதிய க்ரீன் காா்டு கொள்கைக்கு ஜனநாயக கட்சியினா் எதிா்ப்பு ஈரான் போா் நெருக்கடி: மகன் திருமண விழாவைத் தவிா்க்கும் டிரம்ப்!போதைப் பொருள், ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகத்தில் 3 நாள்களில் 1,233 போ் கைது!
/

சிரி... சிரி...

சமையல் எண்ணெய், எரிபொருள் பயன்பாட்டை அரசு குறைக்கச் சொன்னதை நாங்க கடைப்பிடிக்கிறோம்.

News image
Updated On :24 மே 2026, 4:07 am IST

'சமையல் எண்ணெய், எரிபொருள் பயன்பாட்டை அரசு குறைக்கச் சொன்னதை நாங்க கடைப்பிடிக்கிறோம்.'

'அதுக்காக, ஆர்கானிக் சாப்பாடுன்னு சொல்லி, கல்யாணப் பந்தியில எல்லாத்தையும் பச்சையா வச்சிருக்கிறது சரியில்ல!'

-எம்.பி.தினேஷ், கோவை.



'நான் ஹோட்டல் முதலாளி... எனக்கு ஏன் டிப்ஸ் தர்றீங்க?'

'டிப்ஸ் வேண்டாம்னு சொல்ற சர்வரை வேலைக்கு வச்சிருக்கீங்களே, அதுக்குத்தான்!'

-பர்வீன் யூனுஸ், சென்னை.



'கல்யாணம் ஆகாதவங்களுக்கு வீடு வாடகைக்குத் தரமாட்டேன்!'

'இப்பதான் உங்க பொண்ணைப் பார்த்தேன்... சீக்கிரம் எனக்கு கல்யாணமாயிடும்!'



'டாக்டர் என் கணவருக்கு ஞாபகமறதி அதிகமா ஆயிடுச்சி!'

'எப்படிச் சொல்றீங்க?'

'பஸ் ஸ்டாண்டுல நிற்கும்போது என்னைப் பார்த்தே பல்லைக் காட்டுறாரு, டாக்டர்!'

-தீபிகா சாரதி, சென்னை -5.



'என் மனைவியை விட எனக்குத்தான் பவர் அதிகம்...'

'அப்படின்னு யார் சொன்னா?'

'கண் டாக்டர்தான்!'



'மனைவி ஜெயிக்கணும்னு நீங்க நினைச்சா மூணுவேளையும் நல்ல சாப்பாடு கிடைக்கும்...'

'மனைவியையே ஜெயிக்கணும் நினைச்சா?'

'உப்புமாகூட கிடைக்காது!'



'டாக்டர் கன்சல்டிங் பீஸ் 200 ரூபாதானே... நீங்கள் 500 ரூபா கேட்கிறீங்களே?'

'நீங்கள் வெளியில் நர்சிடம் என்னைப் பற்றி தவறாகப் பேசியதுக்கு 300 ரூபாய் கட்டணம்!'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.



'இந்த சாமியார் மந்திரத்தால எதை வேணும்னாலும் வரவழைப்பாராம்!'

'கியாஸ் சிலிண்டர் வரவழைப்பாரா?'



'அந்த புதிரோட விடையைக் கேட்டா, நீங்க வாயைப் பிளந்துடுவீங்க!'

'அப்படியென்ன விடை?'

'ஆ...!'



'என்னோட ரொம்ப நாள் ஆசையை என் மனைவிகிட்ட சொல்லவே பயமா இருக்கு...!'

'அப்படியென்ன ஆசை உங்களுக்கு?'

'ஒரு தடவையாச்சும் என் பேச்சை கேட்க வைக்கணும்ங்கிறதுதான்!'

-வி.ரேவதி, தஞ்சை.



'வாரம் ஒரு நாள் மவுன விரதம் இருந்தா நல்லதா?'

'ஒரு நாள் பொய் பேசா விரதம் இருந்தால் அதைவிட நல்லது.'



'ரெண்டு இட்லி மட்டும் ஆர்டர் சொல்றீங்களே... வயிறு சரியில்லையா?'

'வாங்கித் தர்றவர் வரல... மனசு சரியில்ல!'



'போட்டு வாங்கறதில் மருமகள் கெட்டிக்காரி.'

'எப்படி?'

'பித்தளையைப் போட்டு ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பாத்திரம் வாங்கிடுவா!'



'அவளைக் கண்டு ஏன் இப்படிப் பயப்படுறே?'

'பயப்படலேன்னா மிரட்டுவாளே!'



'இந்த ரகசியம் இன்னோர் காதுக்குப் போகக் கூடாது.'

'ஏன்?'

'இது ஏற்கெனவே எல்லாருக்கும் தெரிந்தது தான்!'



'ஏசி சேர் கார்ல ரிசர்வ் பண்ணவா தாத்தா?'

'அதில் ஈசிசேர் சீட் கிடைக்குமான்னு விசாரி!'

- பர்வதவர்த்தினி, பம்மல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.