ஹம்பியில் இருப்பதைப் போன்றே நரசிம்மர் சிலை!

வாலாஜாபாத்துக்கு அருகே உள்ள கட்டவாக்கத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட அரிய விக்ரகம் விஸ்வரூப லட்சுமி நரசிம்ம சுவாமி என
ஹம்பியில் இருப்பதைப் போன்றே நரசிம்மர் சிலை!

வாலாஜாபாத்துக்கு அருகே உள்ள கட்டவாக்கத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட அரிய விக்ரகம் விஸ்வரூப லட்சுமி நரசிம்ம சுவாமி என வழிப்படப்படுகிறது. அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட விக்ரகத்தின் தலையின் மீது ஆதிசேஷனின் ஏழு தலைகள் விரிந்துள்ளது. நரசிம்மரின் வலது மேல் கரத்தில் சக்கரமும் இடது மேல் கரத்தில் வில் அம்பும் இருக்கின்றன. வலது கீழ் கரம் பக்தர்களைக் காப்பது (அபய ஹஸ்தா) போலவும் இடது கீழ் கரம் வரம் அளிப்பது (வரத ஹஸ்தா) போலவும் காட்சியளிக்கின்றன. நரசிம்மரின் இடது மடியில் அமர்ந்துள்ள மகாலட்சுமி, இடது கரத்தில் தாமரைப் பூவை தாங்கியபடியும் வலது கரம் பக்தர்களைக் காப்பது போலவும் காட்சியளிக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் துங்கபத்ரா நதிக்கரை அருகே, கி.பி.1336 முதல் 1565 வரை விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகராக இருந்த, யுனெஸ்கோ பாரம்பரிய இடமான ஹம்பியில், 6.7 மீட்டர் உயரத்தில் சிதைந்த நிலையில் நரசிம்மரின் பிரம்மாண்ட சிலை வீற்றிருக்கிறது. கிருஷ்ண தேவராயரின் ஆட்சியில் கி.பி.1528-இல் இந்த சிலை நிர்மாணிக்கப்பட்டதாக, ஒரு கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
ஹம்பியில், ஆதிசேஷனின் ஏழு தலைகளின் கீழ் அமர்ந்தபடியும், முழங்காலைச் சுற்றி யோக-பட்டத்தை அணிந்தபடியும் சிதைந்த வடிவத்தில் நரசிம்மர் காட்சியளிக்கிறார். ஒரு காலத்தில் நரசிம்மரின் நான்கு கரங்களில் இருந்த பல்வேறு ஆயுதங்களும் இடது காலில் அமர்ந்திருந்த லட்சுமி தேவியின் சிலையும் உடைக்கப்பட்டுள்ளன.
நரசிம்மரின் கைகளில் இருந்த ஆயுதங்களும் லட்சுமி தேவியின் சிலையும் இன்று காணப்படவில்லை. இருப்பினும், வலது மேல் கரத்தில் சக்கரமும் இடது மேல் கரத்தில் வில் அம்பும் இருந்ததும் கீழிரு கரங்கள் அபய, வரத முத்திரைகளுடன் காட்சியளித்ததும் கோயில் அருகே கிடைத்த இடிபாடுகளில் இருந்து தெரிய வருகிறது. எனவே, கட்டவாக்கத்தில் உள்ள நரசிம்மர் சிலை, விஜயநகர காலத்தில் ஹம்பியில் இருந்ததைப் போன்றே அமைக்கப்பட்டுள்ளது.
அரிய விக்ரகம்; கட்டவாக்கத்தில் உள்ள கடவுள் சிலையில் மூன்று கண்கள் உள்ளன.
பெரிய கடவுள் சிலை: சிலை பீடத்தின் அடிவாரத்தில் இருந்து ஆதிசேஷனின் தலைகள் வரை 25 அடி உயரத்தில் இந்த சிலை காட்சியளிக்கிறது.
அமைவிடம்: காட்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள கட்டவாக்கம், சென்னையில் இருந்து சுமார் 60 கி.மீ. தூரத்தில் உள்ளது.
கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர் , கோயில் - சிற்பங்கள் ஆராய்ச்சியாளர்.
தமிழில்: பிரவீண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com