வெப் சீரிஸில் யுதன் பாலாஜி

"கனா காணும் காலங்கள்' தொடர் மூலம் பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் யுதன் பாலாஜி. இதைத் தொடர்ந்து "பட்டாளம்' படத்தில் நடித்திருந்தார்
வெப் சீரிஸில் யுதன் பாலாஜி

"கனா காணும் காலங்கள்' தொடர் மூலம் பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் யுதன் பாலாஜி. இதைத் தொடர்ந்து "பட்டாளம்' படத்தில் நடித்திருந்தார். பின்னர் பூபதி பாண்டியன் இயக்கிய "காதல் சொல்ல வந்தேன்' படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்தார். இப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. "மெய்யழகி', "நகர்வலம்' ஆகிய படங்களில் நடித்த பாலாஜி தற்போது, இணைய தொடரில் (வெப் சீரிஸ்) களமிறங்கியுள்ளார். பாலிவுட் பிரபலங்கள் பலரும் தற்போது வெப் சீரிஸில் ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். அதுபோல் கோலிவுட்டிலும் நடிகர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். பாபி சிம்ஹா, பார்வதி நாயர், காயத்ரி இணைந்து "வெள்ள ராஜா' என்ற புதிய இணைய தொடரில் நடித்துள்ளனர். இதில் யுதன் பாலாஜியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த இணைய தொடரில் போதைப் பொருள் கடத்தும் கும்பலின் தலைவராக பாபி சிம்ஹா நடித்துள்ளார். அவருடன் பயணிக்கும் கதாபாத்திரத்தில் யுதன் பாலாஜி நடித்துள்ளார். யுதன் பாலாஜி கூறும்போது... ""வெள்ள ராஜா' என்ற இணைய தொடரில் 2-ஆவது முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இளைஞர்கள் அதிகமாக இணைய தொடரை விரும்பி பார்க்கவும், இயக்கவும் ஆர்வமாக இருக்கிறார்கள். எனக்கும் இணைய தொடரில் நடிக்க விருப்பம் இருந்தது. "சவாரி' படத்தை இயக்கிய குகன் சென்னியப்பன் "வெள்ள ராஜா' பற்றி சொல்லும் போது எனக்கு மிகவும் பிடித்தது. உடனே நடிக்க சம்மதித்தேன். என்னுடைய முழு திறமையை நிரூபிக்க காத்துக் கொண்டிருந்த நேரத்தில், "வெள்ள ராஜா' கிடைத்தது மிகவும் சந்தோஷமான விஷயம். அதுவும் அமேசான் பிரைம் என்ற பெரிய நிறுவனம் தயாரிப்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி'' என்று தெரிவித்துள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com