360 டிகிரி

புல்லாங்குழலின் பழைய தமிழ்ப் பெயர் "வங்கியம்' என்பதாகும். மூங்கில், சந்தனம், செங்காலி, கருங்காலி ஆகிய நான்கு மரங்களாலும் , வெண்கலத்தாலும் புல்லாங்குழல் செய்யலாம்.

புல்லாங்குழலின் பழைய தமிழ்ப் பெயர் "வங்கியம்' என்பதாகும். மூங்கில், சந்தனம், செங்காலி, கருங்காலி ஆகிய நான்கு மரங்களாலும் , வெண்கலத்தாலும் புல்லாங்குழல் செய்யலாம். இவற்றுள் மூங்கிலால் செய்வதே சிறந்தது என்று பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன.
 கேனரி தீவுகளில் "விசில்' அடிப்பதை கட்டாய பாடமாக்கி இருக்கிறார்கள். இதன்படி 6-12 வயது குழந்தைகள் வாரத்தில் ஒரு நாள் 30 நிமிடங்கள் வரை சீட்டி பயிற்சி எடுக்கின்றனர். பிறப்பு, இறப்பு, திருமணம், திருட்டு, கொலை, வழிப்பறி, ஆபத்து என்று எல்லாவற்றுக்கும் அங்கே விதவிதமாக சீட்டி அடிக்கிறார்கள்.
 கடற்கரை இல்லாமல் கடற்படை வைத்திருக்கும் ஒரே நாடு பொலிவியா. அண்டை நாடான சிலியிடம் போரில் தோற்றபோது கடற்கரைப் பகுதிகளை பொலிவியா இழந்துவிட்டது. இருந்தும் மீண்டும் அப்பகுதிகளை மீட்டு விடுவோமென்ற நம்பிக்கையில் கடற்படையைப் பராமரித்து வருகிறது பொலிவியா.
 நெ.இராமன்
 வீடுகளில் கதவிலக்கம் எழுதும் முறையை கொண்டு வந்த நாடு பிரான்சு ஆகும்.
 இந்தியாவில் சிறுகதை வங்கமொழியில் தான் முதன்முதலில் எழுதப்பட்டது. தமிழில் வீரமாமுனிவர் எழுதிய "பரமார்த்த குரு' என்னும் கதைதான் முதன்முதல் எழுதப்பட்ட சிறுகதை தொகுப்பாகும்.
 - குலசை ஜேமசன்
 நாம் கடைப்பிடிக்கும் தேசிய காலண்டரின் பெயர் "விக்ரம சகாப்தம்' ஆகும். 1957 மார்ச் 22-ஆம் நாள்தான் தேசிய நாட்குறிப்பு ( சக வருடம்) நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
 கம்ப்யூட்டர் அண்டு ஆட்டோமேஷன் என்ற பத்திரிகைதான் முதன் முதலில் கம்ப்யூட்டர் பற்றிய தகவல்களை வெளியிட்டது.
 பி.கவிதா, சிதம்பரம்.
 வேகமாக காடுகள் அழிந்து வரும் நாடுகளில் முதல் பத்து இடங்களைப் பிடிப்பவை:
 பிரேசில், இந்தியா, இந்தோனேஷியா, கொலம்பியா, மெக்சிகோ, சாய்ரே, காங்கோ, ஜவரி கோஸ்ட், சூடான், நைஜீரியா ஆகியவை.
 குறிஞ்சி மலர், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் என்பது தெரிந்த செய்தி. ஆனால், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில், 2500 அடி உயரத்தில், செங்குறிஞ்சி மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் 24 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் குறிஞ்சிமலர் மலரும்.
 - கஸ்தூரி கதிர்வேல், காட்பாடி.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com