360 டிகிரி

சாப்பிட்டபின், 40 சதவிகிதத்தினருக்கு வயிற்றில் ஜீரணமாகாத நிலை ஏற்படும். இதன் மூலம் நெஞ்சில் எரிச்சல், அடிவயிற்றில் வலி ஆகியவை ஏற்படும்.

வயிற்றை பாதுகாக்க...
 சாப்பிட்டபின், 40 சதவிகிதத்தினருக்கு வயிற்றில் ஜீரணமாகாத நிலை ஏற்படும். இதன் மூலம் நெஞ்சில் எரிச்சல், அடிவயிற்றில் வலி ஆகியவை ஏற்படும். இதற்கு உடனே பரிந்துரை செய்யப்படுவது அண்டாசிட்ஸ். இது வயிற்றில் அமிலத்தை சமமாக்கி, நெஞ்சில் ஒரு பாதுகாப்பு கேடயத்தையும் உருவாக்குகிறது. ஆனால், இப்படி சாப்பிடுவதால், பக்கவிளைவுகள் உண்டு. இதனை சமாளிக்க காப்பிக்கு பதில் டீ சாப்பிட வேண்டும். டீ வயிற்றை அமைதிப்படுத்துவதுடன் தொண்டையில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கும். ஜீரண சக்தியையும் மேம்படுத்தும்... மன அழுத்தமும் குறையும்.
 இஞ்சி
 இதனை சாப்பிடுவதால், வாந்தியெடுப்பது நிற்கும்... வயிற்றுப் பொறுமல் குறையும். பச்சை இஞ்சியை கடிப்பது நல்லது. இல்லாவிடில் இஞ்சி தொக்கு செய்து சாப்பிடலாம். ஆனால், அளவாக சாப்பிடுதல் அவசியம்.
 இந்த காய்கறிகளை சாப்பிடுங்க!
 ப்ராக்கோலி, முள்ளங்கி மற்றும் வெள்ளரிக்காய் பிஞ்சுகளை சாப்பிடுவது நல்லது. ப்ராக்கோலி வயிற்றுப் பொறுமலை சரி செய்யும்.
 சாப்பாட்டிற்குப் பின் நடக்க வேண்டும்!
 இரவு சாப்பாட்டிற்குப் பின் சிறிது நேரம் நடக்க மறக்காதீர்கள். இது, ஜீரண சக்தியை தூண்டி, சாப்பிட்டவற்றை கரைத்து வயிற்றை காலி செய்து விடும். மன அழுத்தத்தைக் குறைக்கும். சுற்றுச்சூழல் மாறுவதால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். ஆனால், சாப்பிட்ட பின் உடற்பயிற்சியை கண்டிப்பாக தவிர்க்கவும். மீறி உடற்பயிற்சி செய்தால், மலச்சிக்கல் அஜீரணத்துக்கு வழி வகுக்கும்.
 அலுவலகத்தில் தூங்கலாம்?
 சீனாவில், அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் காலை 11 மணியிலிருந்து 1 மணிக்குள் எப்போது வேண்டுமானாலும், நிதானமாக சென்று சாப்பிட்டு வரலாம். வந்ததும், ஒரு குட்டித் தூக்கமும் போடலாம். இந்த தூக்கத்தை நிர்வாகம் வரவேற்கிறது. மேனேஜரும், "ஏன் தூங்கினே?' என கேள்வி கேட்க மாட்டர்! பிற்பகல் ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு வேலை செய்வதன் மூலம், உற்பத்தித் திறனை கூட்ட இயலும் என்பது சீனர்களின் நம்பிக்கை. நம்மில், பலர் வேலை பளு காரணமாக, பிற்பகல் உணவையே கைவிடுவதை பார்த்திருப்போம். ஆனால், சீனாவில் பிற்பகல் சாப்பாடு ரொம்ப அவசியம்! எவ்வளவு வேலை இருந்தாலும், சாப்பிட்டுவிட்டுதான், மீதி வேலையை தொடருவர்.
 வாசகர்கள் கருத்து!
 எம்.டி.வாசுதேவன் நாயர், தன்னுடைய 85 வயதிலும் இன்றும், சுயமாக தன் கைகளால் கதை, கட்டுரைகளை எழுதி வருகிறார், இவருடைய எழுத்துகளில் இவருக்கு ரொம்பவும் பிடித்தது, "அசுரவித்து'. ஆனால், இலக்கிய விமர்சகர்கள் சொல்வது, "அம்மாவுக்கு ஏன்?' அதில் மனதை தொடும் வார்த்தைகள் ஏராளமாய் உண்டு என்கின்றனர் வாசகர்கள்.
 -ராஜிராதா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com