360 டிகிரி

பிரான்சு  நாட்டில்  எந்த திரைப்படங்களுக்கும் தணிக்கை கிடையாது.இட்லி பிரசாதம்
360 டிகிரி


வெட்டு இல்லை!

பிரான்சு  நாட்டில்  எந்த திரைப்படங்களுக்கும் தணிக்கை கிடையாது.
இட்லி பிரசாதம்

காஞ்சிபுரம்  வரதராஜப் பெருமாள் கோயிலில்  இட்லியும், திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் மாங்காய் ஊறுகாயும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

அசையா சொத்து!

இமாச்சலபிரதேச மாநிலத்தில் மற்ற மாநிலத்தைச் சேர்ந்த யாரும், அசையா சொத்துகள் வாங்க முடியாது.

அ... அப்படியா?

13 சதவீத நாணயங்களும், 42 சதவீத ரூபாய் நோட்டுகளும் நோய்பரப்பும் பாக்டீரியாக்களைச் சுமந்து வருகின்றன.

சி.ரகுபதி

புலிக்கு ஆங்கிலத்தில்  "டைகர்'  என்பது தெரியும்.  "டைகர்'  என்பது  பாரசீகச் சொல்.  இதற்கு உண்மையான  அர்த்தம்  "அம்பு' என்பதாகும். 

டி.பச்சமுத்து

பூம்புகாரை தமிழ் இலக்கியம்  "புகார்'  என்கிறது.  பௌத்தம்  "சம்பா பதி' என்கிறது.  கிரேக்கம்  "கபேரிஸ்'  என்று குறிப்பிடுகிறது.

அமெரிக்க அதிபர் யாராக இருந்தாலும் அவர்களது காரின் பதிவு எண் 100 தான்.
வல்லாரைக் கீரை மூளை வடிவத்தைப் போலிருக்கும், காலிஃப்ளவர் மூளையைப் போலிருக்கும், அக்ரோட் பருப்பு வளைந்து, நெளிந்து மூளை போலிருக்கும். 

வெள்ளை வெயில்  என்பது  ஏழு  வர்ணங்களின் கலவை.  பால் என்பது அறுசுவைகளின் கலவை. மனித  உடல் பஞ்ச பூதங்களின் கலவை.

- அமுதா அசோக்ராஜா

வண்டின் ரீங்காரம்!

வண்டின் மெல்லிய இறகுகள் மிக விரைவாக அடித்துக் கொள்வதால்தான் ரீங்காரம் ஏற்படுகின்றது. சிலர் நினைப்பது போல அதன் வாயிலிருந்து எழும் ஒலியல்ல அந்த ரீங்காரம்.

மு.சுகாரா

புத்தகங்களுக்கான  "காபி ரைட்'  எந்த அளவுக்கு நீடிக்கும் என்றால் ஒரு நூலாசிரியருடைய ஆயுட்காலம் வரையும். அதன் பிறகு அவர் மரணமடைந்ததிலிருந்து ஐம்பது ஆண்டுகள்  வரையும் நீடித்திருக்கும்.

சி.விஜயாம்பாள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com