சுடச்சுட

  
  four

  வலைதளங்கள் மூலம் இளைய சமுதாயத்தினருக்கு ஏற்படும் தீமைகளைச் சொல்ல வரும் படம் "முடிவில்லா புன்னகை'. ஆரோக்கிய சாமி கிளமென்ட் தயாரித்து இயக்கி நடிக்கிறார். டிட்டோ, ரக்ஷிதா, கூல் சுரேஷ், டெலிபோன் ராஜ், நெல்லை சிவா, வேல்முருகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நாகரீக மாற்றங்கள், பொருளாதார நெருக்கடி, அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை, துரித உணவு முறை என எல்லாமே மனித வாழ்வின் கோபத்தை சுமந்துக் கொண்டுதான் நிற்கின்றன. இதை விட ஒரு கொடுமை.. இப்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றங்கள்.
   குறிப்பாக, சமூக வலைதளங்களின் வளர்ச்சி அதிகரித்து விட்டது.
   சக மனிதனிடம் கூட பேசாத காலம் உருவாகி விட்டது. பிறந்த நாள் வாழ்த்துகள் தொடங்கி, அன்றாடம் பரிமாறப்படும் செய்திகள் வரை எல்லாமே தொழில்நுட்பத்தை நம்பியே இருக்கின்றன. எதிர்காலத்தில் முகநூல் திருமணங்கள் நிகழலாம் என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஆனால், அண்மைக் காலமாக இது போன்று நடந்து வரும் பிரச்னைகளும் அதிகம். மருத்துவ மாணவி ஒருவரை முகநூலில் காதலித்த பாதுகாப்பு அதிகாரி சுட்டுக் கொன்றுள்ளார். இது போன்ற நிறையச் சம்பவங்களின் தொகுப்பாக உருவாகி வருகிறது. வலைதளங்களால் இளைய சமுதாயம் எது போன்ற தீமைகளை அடைந்திருக்கிறது என்பதை சொல்லுவதே படம். சென்னை மற்றும் ஊட்டியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. விரைவில் படம் திரைக்கு வருகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai