இரு மொழிகளில் டான் கீ

சிங்கப்பூர் கேங்ஸ்டர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் "டான் கீ'. காதலியால் கைவிடப்பட்டு வேலையில்லாமல் வருமானமின்றி பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும்
இரு மொழிகளில் டான் கீ

சிங்கப்பூர் கேங்ஸ்டர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் "டான் கீ'. காதலியால் கைவிடப்பட்டு வேலையில்லாமல் வருமானமின்றி பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ஜாக், சிங்கப்பூரில் இருக்கும் தனது உறவுக்காரரை சந்தித்து வேலை கேட்கிறான். ஆனால் அவரோ சட்டத்துக்கு புறம்பான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். எனினும் வேறு வழியின்றி அதே வேலை செய்து படிப்படியாக அவர்களில் ஒருவராகிறான் ஜாக். பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் கடத்த அவள் மிகப் பெரிய டானின் மகள் என்று தெரிய வர அதிலிருந்து எவ்வாறு வெளியே வருகிறான் என்பதே கதை.
 சிங்கப்பூர் கேங்ஸ்டர்களின் வாழ்க்கை முறைகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ரீட் லைட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சிங்கப்பூரின் டானாக நடிக்கிறார் ஜோ ஜியோவானி சிங். ஜாக் எனும் கதாபாத்திரத்தில் முரளிராம் கதாநாயகனாக நடிக்கிறார். சிங்கப்பூரின் பாப் பாடகியும், மாடல் அழகியுமான நபீஸô பேகம் ஜலாலுதின் கதாநாயகி. úஷ்ரன் காஞ்ச்வாலா, ஹபிபி, விக்கி, பிரபு, கதிரேசன்ராஜ், சாவித்திரி ஆகியோருடன் நடன இயக்குநர் தினா, ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் - ஜோ ஜியோவானி சிங்.ஒளிப்பதிவு - சலீம் பிலால்.இசை - பிரவீன், சரவணன். பாடல்கள் - அருண்ராஜாகாமராஜா, உமாதேவி, நோவா, ஷாரிகா. படப்பிடிப்பு முழுக்க முழுக்க சிங்கப்பூரிலேயே இரு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com