முகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்
பயணங்களின் துணை !
By DIN | Published On : 04th August 2019 02:12 PM | Last Updated : 04th August 2019 02:12 PM | அ+அ அ- |

மருந்துகள்
பயணங்களின் போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் முதலுதவி மருந்துகள் கொண்ட டப்பாவை எப்போதும் உடன் வைத்திருங்கள். நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும் மருந்துகளை மறக்காமல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக தலைவலி, வயிற்றுவலி மற்றும் அலர்ஜி மருந்துகள்
அவசியமானவை.
நொறுக்குதீனி
சாக்லேட், உலர் பழங்கள், திராட்சை உடனடி உற்சாகத்தைத் தருபவை. இது குழந்தைகளுக்குக் கட்டாயம் உதவும்.
நோட்புக்-பேனா
முக்கியக் குறிப்புகள் எழுதுவதற்கும், பயண விவரங்களை நீங்கள் தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளலாம். செல்போன் இல்லாத நேரங்களில் தொடர்பு எண் குறித்த விவரங்களைக் குறித்து வைத்துக் கொள்ளலாம்.
துணிமணிகள்
நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது இடையில் விமானம் வேறு நாடுகளுக்குச் செல்லும். அப்போது பயணக்களைப்புத் தெரியாமல் இருக்க மாற்று உடைகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
"ஹேண்ட் வாஷ்'
நாடு விட்டு நாடு செல்லும் போது கைகளை சுத்தம் செய்யும் "வாஷ்' மற்றும் பேப்பர் நாப்கின் அவசியம் தேவை. கையில் கிருமிகள் இல்லாமல் உங்களை பாதுகாக்கும். கிருமிகளே பல நோய் தாக்குதலுக்குக் காரணமாகின்றன.
இசை பதிவு
தற்போது பாடல்களைப் பதிவு செய்யப் பல கையடக்கக் கருவிகள் வந்துவிட்டன. அவற்றில் உங்களுக்குப் பிடித்த பாடல்களைப் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள். இவை உங்கள் பயணத்தை மேலும் சுவராசியமாக்கும். சுவராசியமான புத்தகங்களையும் உடன் வைத்திருங்கள்.
"சேப்டி பின்'
திடீரென நீங்கள் பயன்படுத்தும் துணியில் கிழிந்து விட்டால் "சேப்டி பின்' அப்போது கை கொடுக்கும். சட்டை பட்டன் காணாமல் போனாலும் இந்த சேப்டி பின் தேவை நிச்சயம் இருக்கும்.