ஆங்ரி பேர்ட்ஸ் பாகம் 2

ஆங்ரி பேர்ட்ஸ், ஆங்ரி பேர்ட்ஸ் சீஸன், ஆங்ரி பேர்ட்ஸ் ரியோ என இந்த விளையாட்டின் இரண்டாம் பகுதியாக "ஆங்ரி பேர்ட்ஸ் பார்ட் 2' விளையாட்டு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆங்ரி பேர்ட்ஸ் பாகம் 2

ஆங்ரி பேர்ட்ஸ், ஆங்ரி பேர்ட்ஸ் சீஸன், ஆங்ரி பேர்ட்ஸ் ரியோ என இந்த விளையாட்டின் இரண்டாம் பகுதியாக "ஆங்ரி பேர்ட்ஸ் பார்ட் 2' விளையாட்டு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இது மட்டும் போதாது என்று நினைத்த ரோவியோ நிறுவனம், கையில் எடுத்த மிகப்பெரிய அஸ்திரம்தான் இந்த விளையாட்டைப் படமாக்குவது என்ற திட்டம்.விறுவிறுவென வேலைகளில் இறங்கி, சில வாரங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெய்லரையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
 பின்லாந்து நாட்டின் "பிக் பட்ஜெட் ஃபிலிம்' என்ற பெருமையைப் பெற்றிருக்கும் இந்தப் படத்தின் கதை, எதிரிகளைப் பார்த்தாலே முட்டி மோதும் கோபக்காரப் பறவையான "ரெட்', அதைச் சமாதானப்படுத்த முயற்சிக்கும் சக பறவைகள் என விளையாட்டில் இடம்பெற்ற அதே திட்டங்கள்தான். ஹீரோவான "ரெட்' கேரக்டருக்கு ஜாசன் சுடேய்கிஸ் என்பவரும், பக்கத்து வீட்டில் இருந்துகொண்டு "ரெட்'டைக் கோபப்படுத்தும் "பிக்' கேரக்டருக்கு பில் ஹாடர் என்பவரும் குரல் கொடுத்திருக்கிறார்கள். தவிர, விளையாட்டில் இருக்கும் பாம்ப், சக், டெரென்ஸ் போன்ற கேரக்டர்கள் அத்தனையும் படத்திலும் இருக்கின்றன. 3டியில் உருவாகிக்கொண்டிருக்கும் படம், சரிந்துகொண்டிருக்கும் "ஆங்ரி பேர்ட்ஸ்' மோகத்தை மீண்டும் தூக்கி நிறுத்தும் என்பது ரோவியோ நிறுவனத்தின் பெரும் நம்பிக்கை. வரும் 23-ஆம் தேதி படம் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com