ஓவியக் கல்லூரி கட்டும் நடிகர் 

தயாரிப்பாளர், நடிகர், ஓவியர் என பன்முகங்களைக் கொண்டவர் ஏ.பி.ஸ்ரீதர். ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுக்கெனப்
ஓவியக் கல்லூரி கட்டும் நடிகர் 

தயாரிப்பாளர், நடிகர், ஓவியர் என பன்முகங்களைக் கொண்டவர் ஏ.பி.ஸ்ரீதர். ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுக்கெனப் பிரத்யேக செய்தி மற்றும் கலை, புகைப்பட திறமையை ஊக்குவிக்கும் இரண்டு புதிய முயற்சிகளை அறிமுகம் செய்தது. "கிட்ஸ் நியூஸ்' மற்றும் "அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி' என்ற இரு புதிய முயற்சிகளை உலக மேடையில் புகழ்பெற்ற லிடியன் நாதஸ்வரம் துவங்கி வைத்தார்.

இதில் கலந்து கொண்ட ஏ.பி.ஸ்ரீதர் "என் வாழ்வில் ஒரு சர்வதேச அளவிலான ஓவியக்கல்லூரி ஒன்று கட்ட வேண்டும் என்பது ஆசை. அதன் தொடக்கமாக இப்பள்ளியில் டிப்ஸ் கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி தொடங்கியுள்ளேன். 2002-இல் இருந்து ஏ.ஆர்.ரஹ்மானை தெரியும். அவரிடம் உள்ள அதே அன்பு, பணிவு, அளவற்ற திறமை லிடியனிடம் உண்டு. மேலும் லிடியனின் பெற்றோர்களை பெருமைப்படுத்துவதில் மகிழ்ச்சிக்கொள்கிறேன். இப்பள்ளியின் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைவர் உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com