தயாரிப்பாளரான நடிகை

நடிகை சனம் ஷெட்டி தயாரித்து நடிக்கும் படம் "மேகி'. தர்ஷன், பாண்டியராஜன், ரமேஷ் திலக், கருணாகரன் நடிக்கின்றனர். ஜி.ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.
தயாரிப்பாளரான நடிகை


நடிகை சனம் ஷெட்டி தயாரித்து நடிக்கும் படம் "மேகி'. தர்ஷன், பாண்டியராஜன், ரமேஷ் திலக், கருணாகரன் நடிக்கின்றனர். ஜி.ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.

தயாரிப்பாளர் ஆனது குறித்து சனம் ஷெட்டி கூறியதாவது... ""அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படம் இது.. விளம்பர படப்பிடிப்பில் தர்ஷனைப் பார்த்தேன். அங்கிருந்த சிலர், பார்ப்பதற்கு தர்ஷன் ஹீரோ மாதிரி இருக்கிறார் என்றார்கள். உடனே அவரை ஆடிஷனுக்கு வரவழைத்துத் தேர்வு செய்தேன்.  எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். மேகாலயாவில் படப்பிடிப்பு நடத்தினோம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 14 படங்களில் நடித்துள்ளேன்.

வெற்றிகரமான தயாரிப்பாளராக வேண்டும் என்றால், பல தடைகளை உடைக்க வேண்டும் என்ற அனுபவம் கிடைத்தது. தொடர்ந்து படம் தயாரிப்பேன். தற்போது "எதிர்வினை ஆற்று' என்ற படத்திலும் நடிக்கிறேன்'' என்றார் சனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com