சுடச்சுட

  
  sk12


  ரோஸ்லேண்ட் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் "இது என் காதல் புத்தகம்'. ஜெமினி கேப், அஞ்சிதாஸ், ராஜேஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குநரான மது ஜி கமலம் இப்படத்தை எழுதி இயக்குகிறார். தமிழகத்தின் கிராமம் ஒன்றில் நிகழ்கிற கதைக்களம் இது. பெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்துகிற கதை..

  கல்வியறிவை முழுமையாக எதிர்க்கிற ஊர் தலைவர்.... விவசாயம் செய்வதற்கும், திருமணம் முடித்துப் பிள்ளை பெறுவதற்கும் எதற்குக் கல்வி என கொள்கையுடைய கிராமம் அது. ஆனால் அந்த ஊர்த் தலைவர் மகளுக்கு படிப்பின் மீது நாட்டம். அதனால் தந்தையின் கொள்கைக்கு எதிராகச் செயல்படத் தொடங்குகிறாள் அதனால் அவள் என்ன மாதிரியான பிரச்னைகளை சந்திக்கிறாள் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை. இசைக்கு முக்கியத்துவம் உள்ள இந்தக் கதையில் வைக்கம் விஜயலட்சுமி பாடிய பாடல் உட்பட நான்கு பாடல்கள் உள்ளன. விரைவில் படம் திரைக்கு வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai