சுடச்சுட

  
  sk11

   

  இந்திய இதிகாசங்களில் புகழ் பெற்ற  ராமாயணத்தில் 4638 கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தான் "தண்டகன்'. இந்தப் பெயரில் ஒரு தமிழ்ப் படம் உருவாகி வருகிறது. புதுமுக இயக்குநர் கே. மகேந்திரன் எழுதி இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""சிக்கலான ஒரு கதையை எளிமையான திரைக்கதை மூலம் சுவாரசியப்படுத்தியிருக்கிறேன். சலிப்புக்கும், தொய்வுக்கும் இடமில்லாத வகையில்  விறுவிறுப்பான திரைக்கதை.

  தண்டகன் எனும் கதாபாத்திரத்தின் தீய குணம், பல கொடூரமான செயல்கள் மூலம் இந்தச் சமூகத்தில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அது பலருக்கும் தெரியாத ஒன்று. அதன் பின்னணியில் எத்தகைய மோசமான சம்பவங்கள் நடக்கிறது என்பதைச் சொல்லுவதே கதை.''  ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வி. இளங்கோவன் தயாரிக்கிறார். 

  அபிஷேக், மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா ,'நான்'சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  ஒளிப்பதிவு - தளபதி ரத்னம்.  இசை - ஷ்யாம் மோகன். எடிட்டிங் - வசந்த் நாகராஜ்.  சண்டைப் பயிற்சி -பில்லா ஜெகன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai