Enable Javscript for better performance
பிறந்த நாளில் 4 படங்கள்- Dinamani

சுடச்சுட

    
    rajini

     ரஜினியின் 69-ஆவது பிறந்த நாளை வரும் டிசம்பர் 12-ஆம் தேதி அவரின் ரசிகர்கள் கொண்டாடவுள்ளனர்.
     அன்றைய தினம் அவர் நடித்த படம் எதுவும் வெளியாகாவிட்டாலும் தற்போது நடித்துள்ள "தர்பார்' படத்தின் பாடல் மற்றும் டீஸர் வெளியிடுவதற்கான வேலை நடந்து வருகிறது. இப்படம் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. ஆனாலும் அன்றைய தினம் ரஜினியின் 3 படங்கள் ரீ-ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கான ஏற்பாடுகளை ரசிகர்களும், விநியோகஸ்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.
     சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான ரஜினி நடித்துப் பெரும் வெற்றிப் பெற்ற "பாட்ஷா', ஷங்கர் இயக்கிய" 2.0', பா.ரஞ்சித் இயக்கிய "காலா' ஆகிய 3 படங்களை மலேசியாவில் வெளியிட விநியோகஸ்தர் முடிவு செய்திருக்கிறார். அதே போல் சென்னையில் பல பகுதிகளில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய "பேட்ட' வெளியாகவுள்ளது. இந்தப் படங்களையும் பார்க்க முதலில் வரும் 69 நபர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று ரசிகர் மன்றங்கள் தெரிவித்துள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai