நெகிழ வைத்த சந்திப்பு

சென்னையைச் சேர்ந்த தம்பதிகள் கலியமூர்த்தி மற்றும் தனலெட்சுமி. இவர்கள் 41 ஆண்டுகளுக்கு முன்னால் குடும்ப வறுமை சூழல் காரணமாகத் தங்களுக்குப் பிறந்த இரண்டு ஆண்குழந்தைகளையும்
நெகிழ வைத்த சந்திப்பு

சென்னையைச் சேர்ந்த தம்பதிகள் கலியமூர்த்தி மற்றும் தனலெட்சுமி. இவர்கள் 41 ஆண்டுகளுக்கு முன்னால் குடும்ப வறுமை சூழல் காரணமாகத் தங்களுக்குப் பிறந்த இரண்டு ஆண்குழந்தைகளையும் டென்மார்க்கைச் சேர்ந்தவர்களுக்குத் தத்துக்கொடுத்துள்ளனர்.
 இதற்கிடையில் தனது உருவத்தை வைத்து தான் ஓர் தமிழர் என்பதைத் தெரிந்து கொண்டார் டேவிட். வளர்ப்புப் பெற்றோரிடம் விசாரித்துத் தான் உண்மையான பெற்றோர் எங்குள்ளவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டார்.
 இதனைத் தொடர்ந்து 6 ஆண்டுகளாக டேவிட்டின் தாய் தனலெட்சுமியைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து அவர் சென்னையை அடுத்த மணலியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 நவம்பர் 3 - ஆம் தேதி வெளியான கொண்டாட்டத்தில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கயிருந்த தாய்-மகன் பற்றிய கட்டுரை வெளியானது . அதன் படி கடந்த வாரம் டென்மார்கில் இருந்து சென்னை வந்தார் டேவிட். தனது தாய் குடியிருக்கும் மணலிக்குச் சென்று அவரை நேரில் சந்தித்தார். இதற்காக தனலெட்சுமி தனது உறவினர்கள் அனைவரையும் வீட்டுக்கு அழைத்திருந்தார். டேவிட்டிற்காகச் சிறப்பு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
 மகனை கண்டதும் தாய் தனலெட்சுமி, அணைத்து கொஞ்சி மகிழ்ந்தார். மகன் பேசும் மொழி புரியவில்லை. ஆனால் அம்மாவைத் தேடி அலைந்த சாந்தகுமார், பேசும் சில தமிழ் வார்த்தைகளைக் கேட்ட அவரின் தாய் சந்தோஷத்தில் திளைத்தார்.டேவிட்டுக்குத் தமிழ் தெரியாததால் மொழிப்பெயர்ப்பாளரின் உதவியோடு அம்மாவிடம் பேசினார்.
 இது பற்றி சாந்தகுமார் கூறுகையில், "அம்மாவை நேரில் பார்ப்பேன் என்கிற நம்பிக்கை மட்டும் இருந்தது. அந்த நம்பிக்கையில் தேடி அலைந்தேன். அம்மா கிடைத்துவிட்டார். அம்மாவை நேரில் சந்தித்த இந்த நாளை மறக்கவே முடியாது. இவ்வளவு உறவுகள் எனக்கு இருக்கிறார்கள் என நினைக்கும்போது சந்தோஷமாக உள்ளது.
 விரைவில் என் மகன்கள் மற்றும் மனைவியை அழைத்துவந்து அம்மாவிடம் காட்டணும். விரைவில் தனது அண்ணனையும் கண்டுபிடித்து அம்மாவோடு சேர்த்து வைப்பேன்'' என்றார்.
 -ராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com