சுடச்சுட

    
    sk6

    சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், சோ, வி.கே.ராமசாமி, மனோரமா.  ஸ்ரீகாந்த், எம்.ஆர்.ஆர்.வாசு  உள்ளிட்டோரின் நடிப்பில் வெளிவந்த படம்  "காசி யாத்திரை'. முழுக்க முழுக்க நகைச்சுவை நடிகர்களை வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படத்துக்கு அக்காலக்கட்டத்தில் ரசிகர்களின் பெரும்பான்மையான ஆதரவு இருந்தது. இந்தப் படத்தின் ரீமேக் குறித்து அவ்வப்போது செய்திகள் வந்தன. மறைந்த ராம.நாராயணன் இப்படத்தை ரீமேக் செய்ய ஆலோசித்தார். கடைசியில் அவருக்கு இது கை கூடவில்லை. கிட்டத்தட்ட 300 மேடைகளில் இந்தக் கதையை நாடகமாக அரங்கேற்றினார் இயக்குநர் எஸ்.பி.முத்துரமான். இந்த நிலையில், தற்போது இந்தப் படம் ரீமேக்காகிறது. முன்னணி நடிகர்கள் படத்தை வெளிநாட்டு உரிமை வாங்கி விநியோகம் செய்யும்  மனோன்ஸ் சினி கம்பைன்ஸ் நிறுவனம் "காசி யாத்திரை - 2' படத்தை தயாரிக்க வி.சி.குகநாதனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரிடம் படத்தின் முழு திரைக்கதையையும்  வாங்கி உள்ளது. 

    ராம நாராயணின் பல படங்களுக்கு வசனம் எழுதிய புகழ்மணி இப்படத்தின் இயக்குநர் பொறுப்பை ஏற்றுள்ளார். ராம நாராயணனிடம் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் இதிலும் பணிபுரிய உள்ளார்கள். இந்தப்படத்துக்கு மார்ச் 6 - ஆம் தேதி படப்பிடிப்பு துவங்குகிறது. மே மாதம் திரைக்கு வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai