சுடச்சுட

  
  sk4


  காதல், சென்டிமென்ட் கலந்த ஹாரர் படமாக உருவாகிறது  "நெஞ்சில் ஒரு ஓவியம்'.  "தங்கரதம்' படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி அக்ரிஷா.  போண்டாமணி, ஜெயமணி, யூசுப், தளபதி தினேஷ், பாப்சுரேஷ் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்கின்றனர். ஒளிப்பதிவு இயக்குநராக ராஜாமணி பணியாற்றுகிறார். ஸ்டீபன் இசையமைக்கிறார்.  கதை, வசனம் சுகுணா கந்தசாமி. தயாரிப்பு கே. ஜோதி பிள்ளை, சுகுணா கந்தசாமி. திரைக்கதை, இயக்கம் கே. ஜோதிபிள்ளை, சாமுவேல்ராஜ். ஓவியரான வெற்றி, பெயின்டிங் துறையில் சாதிக்க நினைக்கிறார். இதற்கிடையில் காதலில் விழும் அவருக்கு பிரச்னைகள் வருகின்றன. அதிலிருந்து மீண்டு எப்படி ஜெயிக்கிறார் என்பதை காதல், சென்டிமெண்ட்  ஹாரர் காட்சிகளுடன் விளக்குகிறது படம். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும்  ஆந்திராவில் நடை பெற்றுள்ளது.  படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக் கட்டப் பணிகள் நடக்கின்றன. விரைவில் திரைக்கு வரவுள்ளது''. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai