Enable Javscript for better performance
சிந்தை கவர்ந்த  திருவிழாக்கள் 55: கராட்சு குன்சி மிதவைகள் திருவிழா- Dinamani

சுடச்சுட

  

  சிந்தை கவர்ந்த  திருவிழாக்கள் 55: கராட்சு குன்சி மிதவைகள் திருவிழா

  By - சாந்தகுமாரி சிவகடாட்சம்  |   Published on : 22nd February 2019 03:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sk2


  "திருவிழாக்களின் மூலம் ஒரு கலாசாரத்தின் மேன்மையை அறிந்துகொள்ளலாம்.'

  - சித்தார்த் கேட்ரகடா  (Siddharth Ketragadda)

  பலமுறை ஜப்பானுக்குச் சென்றிருந்தாலும், சென்ற வருடம் நவம்பர் மாதம் அங்கே செல்லும் வாய்ப்பு கிட்டிய பொழுது அங்கே, எங்கெல்லாம் திருவிழாக்கள் நடைபெறுகின்றன என்று ஆராய்ந்தேன். வடமேற்கில் சாகா என்கின்ற நகரத்திலிருந்து 39 கி.மீ. தொலைவில் உள்ள கராட்சு (ஓஹழ்ஹற்ள்ன்) என்கின்ற இடத்தில் நடைபெற இருந்த குன்சி மிதவைகள் திருவிழா என் கவனத்தை ஈர்த்தது.

  “""சிவா, இந்த முறை டோக்கியாவில் நடக்கவிருக்கும் இருதய மாநாட்டுக்குப் பின், நான் சொல்கின்ற இடத்திற்குப் போகலாமா?''” என்று என் கணவரை நோக்கி ஆவலோடு கேட்டேன்”.

  “""எந்த இடம்''” என்றார்,

  “""சாகா என்ற இடம். இது (ஓஹ்ன்ள்ட்ன்) கியுசு என்கின்ற தீவில் இருக்கிறது''” என்றேன்.

  “""அப்படியா நீ சொன்னால் கட்டாயமாக, அங்கே சிந்தையைக் கவரும் வகையில், ஏதாவது நடைபெறும் என்கின்ற நம்பிக்கை எனக்கு உண்டு''” என்றார்.

  “""உங்கள் நம்பிக்கை வீண்போகாது. நவம்பர் 2-ஆம் தேதியிலிருந்து 4-ஆம் தேதி வரை கராட்சு என்கின்ற இடத்தில் நடைபெறும் திருவிழாவைக் காணவேண்டும் என்றால் சாகா நகரத்தில் நாம் தங்கவேண்டும். இந்த சமயத்தில் அங்கே சென்றால், ஒரு கல்லில் மூன்று மாங்காய்கள் என்பதைப்போல் சாகா சர்வதேச பலூன் திருவிழா, சாகா லைட் பேன்டசி  (ப்ண்ஞ்ட்ற் ச்ஹய்ற்ஹள்ஹ்) மற்றும் காரட்சுவில் குன்சி மிதவைகள் திருவிழாக்களைக் கண்டு மகிழலாம்''” என்றேன்.

  “""அது என்ன லைட்பேன்டசி”'' என்றார்.

  “""அக்டோபர் 30-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 14-வரை சாகா நகரத்தை 1.8 மில்லியன் வண்ணமயமான (கஉஈ) லெட் பல்புகளால் அலங்கரித்து இருப்பார்களாம்''” என்றேன்.
  ""“அட, கேட்கவே மிகவும் சுவாரசியமாக இருக்கிறதே. நான்கு நாட்களுக்கு சாகா நகரத்தில் தங்கி இந்த திருவிழாக்களைக் கண்டு களிக்கலாம். மற்ற ஏற்பாடுகளை நீ செய்துவிடு''” என்றார்.

  சாகா என்பது டோக்கியாவைப் போல பெரிய நகரம் இல்லை. அதுவும் திருவிழா காலம் என்பதால் எல்லா ஹோட்டல்களும் மூன்று மாதங்களுக்கு முன்னரே புக் செய்யப்பட்டிருந்தன. ரயில் நிலையத்திற்கு அருகே ஹோட்டல் கிடைத்தால், ரயிலைப் பிடித்து கராட்சுக்கு செல்வதற்கும், சாகா நகரத்திற்கு வெளியே (light fantasy) கேஸ் ஆற்றங்கரையில் நடைபெறும் சர்வதேச பலூன் திருவிழாவுக்கு போவதற்கும் ஏதுவாக இருக்குமே என்று எண்ணினேன்.

  எங்கள் அதிர்ஷ்டம், இரண்டு தினங்கள் மெனக்கெட்ட பிறகு, ஒரு ஹோட்டலில் அதுவும் ரயில் நிலையத்திற்கு அருகிலேயே டபுள் பெட்ரூம் ஒன்று கிட்டியது. எவரெஸ்ட் உச்சியைத் தொட்டுவிட்ட, மகிழ்ச்சியை எய்தினேன்.

  டோக்கியோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட (LED) ஆல் நிப்பான் ஏர்வேஸ்ஸýக்குச் சொந்தமான விமானம், சாகாவை நோக்கி எங்களைச் சுமந்து கொண்டு பறந்துகொண்டிருந்தது. வானம், பஞ்சு பொதிகளாய் மேகங்களை சுமந்திருந்தது. நிலமங்கை மாறுபட்ட மனிதர்களையும், வேறுபட்ட இயற்கைக் காட்சிகளை தன்னகத்தே கொண்டிருப்பது போல அல்லாமல் வானம் எப்பொழுதுமே மேகங்களைச் சுமந்து இருப்பதைக் கண்டு அதிசயத்திருக்கிறேன்.

  டோக்கியோவுக்கும், சாகாவுக்கும் இடையிலான 923 கி.மீ தூரத்தைக் கடந்து விமானம் தரையிறங்கியது. வாடகை கார் மூலம் எங்கள் ஹோட்டலுக்குப் பயணித்தோம். கைக்கடிகாரம் மணி பகல் பன்னிரெண்டு என்று காட்டியது. ஹோட்டலை அடைந்ததும், வரவேற்பு அறையில் இருந்த ரிசப்ஷனிஸ்ட், எங்களுடைய அறை, மூன்று மணிக்குத்தான் கிடைக்கும் என்றாள். அவளால் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. அந்த மொழியை, தத்தி தத்தி குழந்தையின் மழலை போல பேசினாள்.

  மூன்று மணி வரை என்ன செய்வது என்று யோசித்து, எங்களுடைய லக்கேஜ்களை கிளோக் ரூமில் வைத்துவிட்டு, மூன்று மணிக்கு தொடங்க இருந்த சாகா சர்வதேச பலூன் திருவிழாவைக் காணப் புறப்பட்டோம்.

  சாகா ரயில் நிலையத்தில் ஹாட் ஏர் பலூன்களின் பெரிய, பெரிய கட்அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இதைத் தவிர பலூன்களின் படங்கள் தோரணங்களாக எங்கும் காணப்பட்டன. வெளிநாட்டுப் பயணிகளைவிட, உள்நாட்டுப்  பயணிகளின் கூட்டம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. ஒருவழியாக டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு ரயில் ஏறி பலூன் திருவிழா நடக்கும் இடத்தை அடைந்தோம்.

  கேஸ் ஆற்றங்கரையில் மிகப்பெரிய மைதானத்தில் கூடியிருந்த கூட்டத்தையும் பார்த்து மலைத்தோம். சிறுவர்கள், முதியவர்கள் இளைஞர்கள் என்று வயது வித்தியாசம் இன்றி குழுமியிருந்தனர். நிழற்குடைகளின் கீழ் குடும்பமாக, நண்பர்கள் என்று ஒரு பிக்னிக்குக்கு வந்தாற் போன்று அமர்ந்திருந்தனர். பலூன்கள் பறக்கும் நேரம் வந்துவிட்டது. ஆனால் அவைகள் தரையில் காற்று அடிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தன. ஒரு மணி நேர காத்திருப்பிற்குப் பிறகு காற்றின் நிலை பலூன்கள் பறக்கும் அளவுக்கு சரியாக இல்லை. அதனால் இன்று மாலை பலூன்களைப் பறக்க வைக்க முடியாது என்று அறிவித்துவிட்டனர்.

  கூடியிருந்த பெரும் கூட்டம், ஒரு சிறிய சத்தம் கூட போடாமல், கலாட்டா செய்யாமல், இவ்வளவு தொலைவு மெனக்கெட்டு வந்தோமே என்று சலித்துக் கொள்ளாமல் அமைதியாகக் கலையத் தொடங்கியதைப் பார்த்து, நானும் என் கணவரும் அதிசயித்தோம். நாங்களும், இன்னும் இரண்டு நாட்கள்  காலையும் மாலையும்,  பலூன் திருவிழாதான் நடக்கவிருக்கிறதே என்று நடையைக் கட்டினோம்.

  ஹோட்டலுக்குத் திரும்பும் பொழுதே இருள் பரவத் தொடங்கியிருந்தது. எங்களுடைய அறை தயாராக இருக்க, உள்ளே சென்று சிறிது ஓய்வு எடுத்தோம், பிறகு எங்களைப் புதுப்பித்துக் கொண்டு, ஹோட்டலை விட்டு வெளியே வந்தோம்.

  ஒரு ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு அசால்ட்டாக, வந்தவர்கள், வெளியே வீசிய குளிர் காற்றின் தாக்கத்தைத், தாங்க முடியாமல் மீண்டும் அறைக்குச் சென்று எங்களுடைய பிளேசர்களை அணிந்துகொண்டு தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினோம்.

  சாகா நகரத்தின் லைட் பேன்டசியைக் கண்டு களிக்க வேண்டாமா? அதற்குத்தான், எங்கள் நடையை எட்டிப் போட்டோம். சாகாவின் நடுநாயகமாக, அமர்ந்திருந்த சதுக்கத்துக்கு இட்டுச் செல்லும் பாதைகளிலும், தெருக்கள் சங்கமிக்கும் இடத்திலும், சதுக்கத்திலும் லட்சக்கணக்கில் பல்புகள் எரிந்து, இரவை பகலாக்கும் என்று படித்ததினால், அந்தத் திசையை நோக்கி, கையில் பிடித்திருந்த வரைபடம் காட்டிய வழியில் நடந்தோம், திரும்பினோம், இதயத்துடிப்பில் ஒன்றை  இழந்தோம்.

  (தொடரும்)
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai