தாய்க்கு கோடி வந்தனம் !

தாயின் பெருமைகளை பற்றி  கூற வேண்டுமென்றால்,  ஆண்டவன் எல்லோரிடமும், இருக்கமுடியாது, அதனால்தான் அவர் தாயை படைதார் என்று சொல்வார்கள்.
தாய்க்கு கோடி வந்தனம் !

தாயின் பெருமைகளை பற்றி  கூற வேண்டுமென்றால்,  ஆண்டவன் எல்லோரிடமும், இருக்கமுடியாது, அதனால்தான் அவர் தாயை படைதார் என்று சொல்வார்கள். அதை தாரக மந்திரமாக தனது உள்ளதில் வைத்துக் கொண்டு வாழ்பவர்  ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் முரளி.  இதனால், ஆண்டு தோறும் சிறந்த மகனை அல்லது மகளை பெற்ற தாயாருக்கு அவர்களது பிள்ளைகளை கொண்டே  பாராட்டுப் பத்திரம் வாசிக்க வைக்கும் (பேச வைக்கும் பணியைச் செய்து வருகிறார்.   இந்தப் பாராட்டும்  எண்ணம் எப்படி தோன்றியது என்பது கூறுகிறார்: 

""இது ஒரு சந்தோஷமான நிகழ்வு.  ஆண்டிற்கு சுமார் 200 நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். இதுவரை 10,000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளோம்.  ஆனால் இந்த நிகழ்ச்சி மட்டும் என் மனதிற்கு மகிழ்ச்சிதரும் நிகழ்ச்சி. கடவுள் அருளாலே இந்த வருடம் 10- ஆவது முறையாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் சிறப்பென்னவென்றால் எந்த அறிமுகமும் தேவை இல்லாத உறவு அம்மா. இன்னும் சொல்லப் போனால் அம்மாதான் நமக்கு அப்பா மற்றும் பல்வேறு உறவு முறைகளை அடையாளம் காட்டுகிறார். ஒவ்வொருவருக்கும் அவர்கள் அம்மா தான் எல்லாம். இதில் மாற்று கருத்து இருக்க முடியாது. 

என்னுடைய தாயார் நாராயணி அம்மாள் கண்டிப்பானவர். அதே சமயம் அன்பை பொழிவார். நமது வாழ்க்கைக்கு அன்பும் தேவை கண்டிப்பும் முக்கியம் என்பதை எனக்கு சொல்லிக் கொடுத்தவர் அம்மா. அப்பா சுத்தமாக இருக்கவேண்டும் சென்று சொல்வார். அவர்களுக்கு நான் மகனாக பிறந்ததற்கு  கொடுத்து வைத்திருக்க வேண்டும். 

இந்த நிகழ்ச்சியை நாங்கள் நடத்த விரும்பியதன் காரணம், அம்மா என்ற மந்திர சொல்தான். ஒவ்வொருமுறையும் சுமார் 12 அம்மாக்களை நாங்கள் கெüரவிக்கிறோம். இப்படி செய்யும்போது என் தாயாரை நான் மகிழ்விப்பதாக உணர்கிறேன். 2008- ஆம்  ஆண்டு, நாங்கள் ஆரம்பித்தபோது செஸ் ஆனந்த், பெப்சி தலைமை அதிகாரி இந்திரா நூயி, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், பேச்சாளர்  சுகி சிவம், கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், டென்னிஸ் வீரர் அமிர்தராஜ் மற்றும் வக்கீல் பராசரன் ஆகியோரின் தாயாரை கெüரவப்படுத்தினோம். இப்படி ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறோம். இந்த வருடம் நான் நடிகர் பார்த்திபன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், எழுத்தாளர் இந்திரா செüந்தர்ராஜன், சாய்ராம் தொழிலகங்களின் தலைவர் சாய் பிரகாஷ், லியோ முத்து, தோஹா வங்கியின் தலைமை செயல் அதிகாரி சீதாராமன், கர்நாடக பாடகி காயத்ரி வெங்கட்ராகவன் போன்றோரின் தாய்மார்களை நாங்கள் கெüரவப்படுத்த இருக்கிறோம். 

உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த்  தலைமை ஏற்று இம்மாதம் 18 -ஆம் தேதி, இந்நிகழ்ச்சி சென்னை  மியூசிக் அகாதெமி அரங்கில் நடைபெற உள்ளது. "மாத்ரு தேவோ பவா' என்று சொல்லி தான் எல்லோருமே வாழவேண்டும் என்று நான் எப்போதும்  சொல்வேன். இந்த நிழ்ச்சிக்கும் இதுவே தாரக மந்திரம்'' என்றார் முரளி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com