அழியாத சித்திரங்களாக பதிந்தன!: சிந்தை கவர்ந்த  திருவிழாக்கள் - 51

"எவ்வளவு அழகாக இலைகள் முதுமை அடைகின்றன. தங்களுடைய கடைசி நாட்களில் எவ்வளவு ஒளிமயமாகவும், வண்ணமயமாகவும் இருக்கின்றன.'
அழியாத சித்திரங்களாக பதிந்தன!: சிந்தை கவர்ந்த  திருவிழாக்கள் - 51

"எவ்வளவு அழகாக இலைகள் முதுமை அடைகின்றன. தங்களுடைய கடைசி நாட்களில் எவ்வளவு ஒளிமயமாகவும், வண்ணமயமாகவும் இருக்கின்றன.'

- ஜான் பரோஸ் (John Barroughs))


ஜப்பானில் பேருந்து ஓட்டுநர்களே கண்டக்டர்களாகவும் செயல்படுவார்கள். நாங்கள் நீட்டிய பணத்தை வாங்க மறுத்த ஓட்டுநர், ஜப்பானிய மொழியில் சொன்னது எங்களுக்குப் புரியவில்லை. நல்லவேளை, எங்களுக்கு பின்னால் நின்றிருந்த பெண்மணிக்கு சிறிது ஆங்கிலம் தெரிந்திருந்தது. அவர் விளக்கி சொன்னது இதுதான்,

"நீங்கள் இந்த பேருந்துக்கான டிக்கட்டுகளை முன்பதிவு செய்திருக்க வேண்டும், அப்படி செய்யாத பட்சத்தில் இங்கிருந்து அரை கி.மீ தொலைவில் உள்ள பேருந்து டிக்கட் கவுண்டருக்குச் சென்று டிக்கட்டுகளை வாங்கவேண்டும்.

அடாடா, எங்களுக்கு வழி சொன்ன டிராவல் டெஸ்கில் வேலை பார்க்கும் பெண் இதைச் சொல்ல மறந்துவிட்டிருக்கிறாள். சரி இப்பொழுது வருத்தப்பட்டு பயன் இல்லை. இந்த பேருந்து இன்னும் பத்து நிமிடத்தில் கிளம்பிவிடும். அதனால் அடுத்த பேருந்துக்கு டிக்கட்டுகளை வாங்க நடையை எட்டிப் போட்டோம்.

இருபது நிமிடம் நடந்து சென்று வேண்டிய இடத்தை அடைந்து, பயணச் சீட்டுகளை வாங்கிக் கொண்டோம். ரயில் நிலையத்தின் வழியாகத்தான் பேருந்து நிலையத்தை அடைய வேண்டும். அடுத்த பேருந்துக்கு இன்னும் 45 நிமிடங்கள் இருந்தன. ரயில் நிலையத்தின் வெளிப்புறத்தில் இருந்த ஒரு இனிப்பகம் என்னைத் தன்பால், இரு கைகளை நீட்டி அழைத்தது.
ஆமாம், எத்தனை விதமான கேக்குகள், இனிப்பு பண்டங்கள். அவற்றில் பல இலையுதிர் காலத்திற்காகவே ஸ்பெஷலாக செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆப்பிள் பழங்களைப் போலவே உருவாக்கப்பட்ட, முற்றிலும் கோக்கோ மற்றும் பால், சர்க்கரை, கிரீமினால் ஆன கேக்கை வாங்கினோம். அந்த கேக்குகளை அழகிய அட்டைப் பெட்டியில் வைத்து பார்சல் செய்து கொடுத்தனர். இதில் என்ன பெரிய ஆச்சரியம் என்றால் அந்த கேக்குகள் கரைந்துவிடக் கூடாது என்று, உடைந்த ஐஸ் கட்டிகள் அடங்கிய சிறிய பைகளை அந்த கேக்குகளின் பக்கங்களில் வைத்து பார்சல் செய்து கொடுத்தார்கள். நாங்கள் இரண்டு மணி நேரம் கழித்து கவாகுசிகோவை அடையும் வரையில் கேக்குகள் உருக்குலையாமல் அப்படியே இருந்தன, சுவையில் நாக்கின் சுவை அரும்புகளை அடிமை கொண்டன. இந்த இலையுதிர்கால கேக்கை வாழ்நாளில் மறக்க முடியாது.

எங்களை சுமந்துகொண்டு, பேருந்து வெண்ணெய்யைப் போல் வழுக்கிக் கொண்டு சென்றது. சாலைகளின் அமைப்பு அப்படி இருந்தது. ஜன்னலின் வழியாகக் கண்ட காட்சிகள், இயற்கை அன்னையின் ஆனந்தத் தாண்டவமாக மனதைக் கொள்ளை கொண்டது. கவாகுசிகோவை அடைவதற்கு ஒரு பதினைந்து கி.மீ இருக்கும்பொழுதே இலையுதிர்கால தாக்கத்தினால், நிறம் மாறிய இலைகளை சுமந்து கொண்டு மரங்களும், செடிகளும் காட்சி அளித்தன. பர்னிங் புஷ் எனப்படும் புதர் செடிகளும் சிகப்பு வண்ணத்தை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தன.

ஒரு பேருந்தை தவறவிட்டு மறு பேருந்தைப் பிடித்து கவாகுசிகோவை வந்து அடைவதற்குள் மாலை மணி ஐந்தாகி விட்டிருந்தது. இங்கே இருந்து வேறு ஆம்னி பேருந்தின் மூலம் 15 நிமிடங்கள் பயணித்து, கவாகுசிகோ ஏரியை அடைந்தோம். லேசாக இருள் கவிழத் தொடங்கியிருந்தது, பனிக்குல்லாவை அணிந்திருந்த பியுஜி மலையின் அழகிய தோற்றமும், நீல வானமும், கவாகுசிகோவின் ஏரியின் நீல நிறமும் கைகோர்த்துக் கொள்ள, குளிர்ந்த தென்றல் காற்று என் கேசங்களை வருடி, உடம்பைத் தழுவிக் கொள்ள, ஏரியின் கரையை விட்டு சற்று தள்ளி வரிசை கட்டி நின்ற மேப்பிள் மரங்களின் இலைகள் சிகப்பு வண்ணத்தை வாரி இறைக்க, கண்ட காட்சிகள் தந்த போதை என் மூளையைத் தாக்க, இது சொர்க்கமா அல்லது பூலோகமா என்ற மயக்கத்தை ஏற்படுத்த, உடல் இயக்கத்தை மறக்க, உள்ளமோ ஆனந்தக் கூத்தாடியது. சிறிது நேரம் இந்த மோன நிலையை அனுபவித்து, பின்பு கைகள் ஏந்தியிருந்த கேமிரா மூலம் நிஜங்களை, புகைப்படங்களாக எடுத்துக் கொண்டேன்.
ஜப்பான் மொழியில் (ஙர்ம்ண்த்ண்) மோமிஜி என்றால் மேப்பிள் மரம் என்று அர்த்தம். கவாகுசிகோ ஏரியிலிருந்து 150 மீட்டர்கள் தள்ளி மோமிஜி கெய்ரோ (ஙர்ம்ண்த்ண் ஓஹண்ழ்ர்) என்ற இடத்தில் சாலையின் இருபக்கங்களிலும் 60 மேப்பிள் மரங்கள் வரிசை கட்டி நின்றிருந்தன. சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிறங்களில் அந்த மரங்களுடைய இலைகள் இருந்தன. தொலைவில் இருந்து பார்த்தால், மேப்பிள் மரங்களால் ஆன சிகப்பு வளைவு போல் பிரமிக்க வைத்தது. இந்த இடத்திலிருந்து 3 கி.மீ தள்ளி மோமிஜி டனல் (ஙர்ம்ண்த்ண் பன்ய்ய்ங்ப்) என்ற ஓர் இடம் இருக்கிறது. பொடி நடையாக நடக்கலாம் என்று எண்ணியபொழுது, அங்கும் பேருந்துகள் அழைத்து செல்லும் என்பதை அறிந்து ஒரு பேருந்தில் ஏறி அந்த இடத்தை அடைந்தோம்.
இப்பொழுது இருள், முற்றிலுமாக தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி இருந்தது. ஆயிரக்கணக்கான உல்லாசப் பயணிகள், நூற்றுக்கணக்கில் பிரிந்து குழுவாக அங்கே தோள்களில் தொங்கும் கேமிராக்களுடன் வலம் வந்து கொண்டிருந்தனர். ஓர்அழகிய சிற்றோடை ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஓடையின் இருபுறங்களிலும் மேப்பிள் மரங்களும், கிங்கோ மரங்களும் மாறி, மாறி வளர்ந்து நின்றுகொண்டிருந்தன. மேப்பிள் மரங்கள் சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிறங்களுடனும், கிங்கோ மரங்கள் முற்றிலுமான மஞ்சள் நிற இலைகளுடனும் காட்சி அளித்தன. கூம்பு வடிவத்தில் இருந்த கிங்கோ மரங்களும் நீண்ட கிளைகளை விரித்து நின்ற மேப்பிள் மரத்தையும் பார்த்த பொழுது, மணமகனும், அவன் அருகே கன்னங்கள் சிவந்து நிற்கும் மணமகளைப் போலவும் காட்சி தந்தன.
எப்படி இருட்டில் இப்படி ரசிக்க முடிந்தது என்ற கேள்வி எழுகிறதுதானே. ஒவ்வொரு மரத்திற்கு அடியிலும் ஃபோக்கஸ் லைட்டுகளை வைத்திருந்தனர். உயரத்தில், கீழே, பக்கவாட்டில் என்று, சிற்றோடையின் பக்கத்தில் நம்மை இட்டுச் செல்லும் பாதையில் போக்கஸ் லைட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இருட்டில் தங்கள் மேல் படும் மின்சார விளக்குகளின் ஒளியால் அந்த மரங்களும், அவைகளின் இலைகளும் காட்டிய அழகை வாழ்நாளில் மறக்க முடியாது. அவை அழியாத சித்திரங்களாக மனதில் பதிந்துவிட்டன.
மோமிஜி கெய்ரோவில் இருந்து ஒரு ஐந்து நிமிட நடையில் என்கிஹால் (உய்ந்ங்ண் ஏஹப்ப்) என்ற இடத்தில் கவாகுசிகோ ஜாஸ் திருவிழா நடைபெற்றது. பலவிதமான ஜாஸ் கலைஞர்களின் வாசிப்பைக் கேட்டு மகிழ்ந்தோம். அது மட்டுமா அங்கேயும், மோமிஜி டனல் அருகேயும் நிறுவப்பட்டிருந்த தற்காலிக உணவகங்களில் இலையுதிர் காலத்திற்கான உணவு வகைகளை உண்டு களித்தோம். இந்த காலகட்டத்தில் ஜப்பானில் அதிக அளவில் செஸ்நட்டுகள் அறுவடை செய்யப்படுகின்றன. குரி (ஓன்ழ்ண்) என்றால் ஜப்பானில் "செஸ்நட்' என்று அர்த்தம். குரிகோஹன் (ஓன்ழ்ண்ஞ்ர்ட்ஹய்) என்கின்ற செஸ்நட்டுகள் கலந்த சாதத்தையும், குரி மன்சு (ஓன்ழ்ண் ம்ஹய்த்ன்) என்ற செஸ்நட் அடங்கிய ஆவியில் வேகவைத்த பன்களையும் சாப்பிட்டோம். உருளைக்கிழங்குகளை, ரொட்டித் துகள்களில் முக்கி, வறுக்கப்படும் குரோகட்டுகள் (இழ்ர்வ்ன்ங்ற்ற்ங்) அங்கே சாப்பிட்டதுபோல எங்கேயும் அவ்வளவு சுவையுடன் இருந்ததில்லை. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், கிராமவாசிகள் தங்கள் கைவினைப் பொருட்களை கடைவிரித்திருந்தனர். கண்களுக்கு விருந்து, வயிற்றுக்கு சுவையான உணவு, காதுகளுக்கு இன்னிசை, இவைகளோடு ஷாப்பிங் செய்ய கிராஃப்ட் பஜாரும், சேர்ந்து கொள்ள, கவாகுசிகோவின் இலையுதிர் திருவிழா, பெருவிழாவாக நம்மை அசத்துகிறது.

- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com